முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பயன்பெரும் வகையில் முதன் முறையாக கடல் ஓசை எப்,எம் வானொலி நிலையம் புதியதாக இன்று திறப்பு.

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,பிப்,4:  கடலில் மீனவர்கள்  மீன்பிடித்துக்கொண்டிருக்குபோது  கடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களை தெரிந்துகொள்ளும் வகையில் பாம்பன் பகுதியிலுள்ள தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படவுள்ள கடல் ஓசை  என்னும் புதிய எப்.எம் வானொலி  நிலையம் இன்று சனிக்கிழமை பாம்பன் பகுதியில் திறக்கப்படவுள்ளது.

    மேலும் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கடல் ஓசை எப்.எம் வானொலி நிலையத்தின் இயக்குனர் மற்றும் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியது.

ராமநாதபுரம் மாவட்ட பாம்பன் பகுதியில் நேசக்கரங்கள் தனியார் அறக்கட்டளை சார்பில் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்த அறக்கட்டளை  சார்பில் ராமேசுவரம் உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடலோரப்பகுதியிலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பயன் பெறும் வகையில் பாம்பன் பகுதியில் கடல் ஓசை என்னும் எப்,எம் வனொலி நிலையம் திறப்பதற்கான நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் வானொலியின் சோதனை ஒலிபரப்பு ஒட்டம் கடந்த சில மாதங்களாக பாம்பன் பகுதியிலுள்ள வானொலி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த வானொலி மூலம் கடலில் ஏற்படும் சுனாமி,புயல்,நீரோட்டம்,கடல் சீற்றம் கடலில்  மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை சந்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொள்ளுதல்,மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் மன உளைச்சலை தடுக்கும் வகையில் பொழுதுபோக்கிற்காக குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் நிழ்ச்சியும்,மற்றும் தேர்தல் விழிப்புணர்வு உள்பட அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள்  குறி்த்தும்,  அரசு அறிவிக்கப்படும் அறிவிப்புகளையும் மீனவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், மத்திய,மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வானொலியின் தொலை தொடர்பு பாம்பன் பகுதியிலிருந்து தரையிலும்,கடலிலும் 55 கிலோ மீட்டர் தொலைதூரம் தொலை தொடர்பு கிடைக்கு வகையில்  அமைக்கப்பட்டுள்ள என தெரிவித்தார்.இந்த வானொலி நிலையம் சோதனை ஒலிபரப்பு நிறைவடைந்ததால் முறையாக மீனவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சனிக்கிழமை வானொலி நிலையம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையத்தை முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் பா.சிதம்பரம் திறந்து வைத்து இலவசமாக ஆயிரம் மீனவர்களுக்கு எப்.எம்.ரேடியோ வழங்கப்படவுள்ளதாகவும்,கார்த்திக் சிதம்பரம் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் நிகழ்ச்சியில் பி.ஹெச்.அப்துஹமீது,முனைவர்கள் ஞானசம்பந்தன்,குறிஞ்சிவேந்தன் ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும்  கடல் ஓசை எப்.எம். வானொலி நிலையத்தின்  இயக்குனரும்,அறக்கட்டளையின் செயலாளரான ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்..                                                    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்