முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு அம்சங்களூடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி - பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் அச்சடிக்கப்பட்டு வரும் புதிய 100 ரூபாய் நோட்டுகள், விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன.

 உர்ஜித் படேல்  அறிவிப்பு :

இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளைப் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகவே, புதிய நோட்டுகளும் இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். பாதுகாப்பான நவீன முறையில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய ரூ 100 செல்லும் :

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையில் ஆர் என்ற ஆங்கில எழுத்து அச்சடிக்கப்படும் எனவும், ஆளுநர் உர்ஜித் ஆர் படேல் கையெழுத்து இடம்பெற்று இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டிற்கு பின்பகுதியில் 2017-ம் ஆண்டு அச்சிடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவும், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago