முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

மண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பகுதியில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற  விழாக்களில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:- மண்ணில் மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர்.ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சிதான் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணைப்புரியும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டுப்புத்தகங்கள், விலையில்லா சீருடை, விலையில்லா பயணப் பேருந்து பயண அட்டை உட்பட 14 வகையான மாணவர் நலன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு வரை படித்து அதற்கு மேல் படிப்பினை தொடர முடியாமல் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடும் எண்ணத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் மாணவர்களை ஊக்குவித்திடும் வகையில் பொறியியல் படிப்பிற்கு நிகராக ஊக்க நிதியுடன் கூடிய ஓராண்டுப் பயிற்சி வழங்கி, பயிற்சியின் முடிவில் வருடத்திற்கு ரூ.2.40 லட்சம் அளவில் ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை வழங்கிடவும் உறுதி அளித்துள்ளார்கள். விரைவில் அதற்கான உரிய முறையில் அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பிறகு நேர்காணல் மூலம் 125 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
 மேலும் தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தி வரும் பல்வேறு மாணவர் நல திட்டங்களின் மூலம் 2016ம் கல்வியாண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தை; சார்ந்த மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி சதவிகிதத்தில் 10-ம் வகுப்பில் மாநில அளவில் நான்காம் இடத்திலும், 12-ம் வகுப்பில் மாநில அளவில் ஒன்பதாம் இடத்திலும் உள்ளது. இத்தேர்ச்சி சதவிகிதத்தில் 100 சதவிகிதமாக உயர்த்தி மாநில அளவில் முதலாம் இடத்திற்கு முன்னேரிடும் வகையில் ஆசிரியர், ஆசிரியைகள் மு

னைப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
   இவ்விழாக்களில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா,  மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், உச்சிப்புளி பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவரும் முன்னாள் ஒன்றியகவுன்சிலருமான ராஜேந்திரன், மண்டபம் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காளீஸ்வரி விஸ்வநாதன், சுலைமான், முன்னாள் கவுன்சிலர்கள் மைதீன், சீனிகாதர் முகைதீன், முனியசாமி,முகம்மது யூசுப்,நம்புவேல்,முன்னாள் ஊராட்சி மன்ற துணைதலைவர் வேணுகோபால், மாவட்ட சிறுபான்மை நலபிரிவு செயலாளர் தர்வேஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லானி சீனிக்கட்டி, ஒன்றிய மாணவர் அணி அஸ்கர் அலி, இளைஞர் பாசறை நிர்வாகிகள் பிரவீன் குமார், சித்திக்,என்மனங்கொண்டான் புதுநகரம் ஜமாத்தார்கள், முன்னாள்; ஊராட்சி மன்ற உறுப்பினர் புஸ்பம், மண்டபம் அவைதலைவர் சுப்பிரமணி, உச்சிப்புளி வர்த்தக சங்க தலைவர் அசரியா,தர்கா வலசை நிர்வாகிகள் குப்புச்சாமி, ஆண்டி, மண்டபம் வார்டு செயலாளர் கார்மேகம், முகம்மது யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்