முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-  தமிழக சட்டமன்ற தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
      அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா நேற்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆலோசணை கூட்டத்தில் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டது தெரிந்ததே. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்து அந்தந்த பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
     ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் அங்குச்சாமி ஏற்பாட்டின்பேரில் அரண்மனை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநதி ஸ்ரீவாரிசெல்வம், வக்கீல் பிரிவு செயலாளர் அரிதாஸ், நகர் கழக நிர்வாகிகள் செல்வம், வீரபாண்டி, ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தமிழக சட்டமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அமோக ஆதரவு தெரிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago