முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அ.தி.மு.க. சார்பில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி நிலத்திற்கும், நீர்ஆதாரத்திற்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த மண்ணை நாசப்படுத்தி, நிலத்தடி நீரை உறியும் அபாயகரமான சீமைக்கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி அழித்து மீண்டும் வளராத வகையில் அழிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆரம்பத்தில் 80 ஜேசிபி எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி தொடங்கப்பட்டு கடந்த 3 நாட்களாக 203 எந்திரங்கள் மூலம் இரவு பகலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நிலங்களில் வளர்ந்துள்ள இந்த சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை ஒருவழியில் நடந்து கொண்டிருக்க தனியார் அமைப்புகளும், தன்னார்வ தொண்டர்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற களத்தில் இறங்கி உள்ளனர்.

    ராமநாதபுரம் நகரின் தலைமையிடம் அமைந்துள்ள பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் செயலாளரும் பட்டணம் காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் பதவி வேட்பாளருமான ஸ்டாலின்ஜெயச்சந்திரன் ஏற்பாட்டின்பேரில் இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயன்தரும் மரங்களை வளர்க்கும் வகையில் அதற்கான விதைகளை விதைப்பதற்காக தோன்றிய விதைகள் அமைப்பின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பணியில் சுப்பிரமணியன், ஆத்மாகார்த்திக், செந்தில், ஜெயமுரளி, மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த அழகர், சண்முகபாண்டியன், பட்டணம்காத்தான் ரவி, ரெத்தினக்குமார், சுரேஷ் ஆகியோர் சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். அரசு நிலங்கள் தவிர தனியார் இடங்களில் வளர்ந்துள்ள இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வசதி இல்லாவிட்டால் தகவல் தெரிவித்தால் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அங்கு விரைந்து சென்று உடனடியாக சீமைக்கருவேல மரங்களை அகற்றி உதவி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அறிந்த கலெக்டர் முனைவர் நடராஜன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago