முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் விறுவிறுப்பு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

 அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற 10&ந்தேதி ஜல்லிக்கட்டுவிழா நடைபெற உள்ளது. இதையட்டி ஏற்கனவே காளைகள் கால்நடை மருத்துவமனை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது நேற்று காலையிலிருந்து மாலை வரை மாடுபிடி வீரர்களுக்கான பதிவுகள் அங்குள்ள வருவாய்த்துறை அலுவலகம் அருகில் நடந்தது. இதில்  வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் வீரபத்திரன், மண்டல துணைதாசில்தார் வனிதா வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள், மாடுபிடிவீரர்களுக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 15&க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வயது, எடை, உயரம் உள்ளிட்ட பரிசோதனையில் ஈடுபட்டு தகுதியானவர்களை மட்டும் தேர்வு செய்தனர்.  மேலும் மாடுபிடி வீரர்களின் 3 புகைப்படம், வயதுக்கான சான்று மற்றும் ஆதார் அட்டை நகல்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு ஜல்லிக்கட்டு விழா நடைபெற இருப்பதால் மாடுபிடிவீரர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இது தவிர பரிசுகளும் உயர்ந்த ரகங்களாக இருப்பதால் அதிக அளவில் இளைஞர்கள் விருப்பத்துடன் வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் காலரி அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. போலீஸ் டி.ஐ.ஜி ஆனந்த்குமார் சோமானி, மேற்பார்வையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் பதிவிற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலக பகுதியில் அதிக அளவில் குவிந்து வரிசையில் நிற்காமல் தகராறு செய்ததால் போலீசார் தலையீட்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முயன்றனர். இதனை மீறி சிலர் செயல்பட்டதால் போலீசாருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

    பாலமேட்டில்  வருகிற 9&ந் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையட்டி இன்று 7&ந் தேதி செவ்வாய்கிழமை மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் முன்பதிவு தொடங்குகிறது. மேலும் வாடிவாசல் பகுதி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago