முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்-கலெக்டர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் ராமநாதபுரம் பெரிய கண்மாய் கரை, லாந்தை கண்மாய் கரை ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி, ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 35.30 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றம் செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதற்காக மொத்தம் 203 எண்ணிக்கையிலான ஜே.சி.பி, பொக்லைன் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்பிடி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், ராமநாதபுரம் வட்டம், தொருவ@ர் கிராமப்பகுதியில் ராமநாதபுரம் பெரியகண்மாயின் கரையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் லாந்தை கிராமத்தில் உள்ள கண்மாயின் கரையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஆகியவற்றை முற்றிலுமாக அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளைப் பார்வையிட்டார். அதன்பின்பு, தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என அறிவிப்பிற்கு பிறகும் இதுநாள் வரையில் அகற்றாமல் இருக்கும் உடைமைதாரர்களுக்கு முன்னறிவிப்பு வழங்கி அவற்றை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபனிடம் தெரிவித்தார். அதற்கு, ராமநாதபுரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் உள்ள உடைமைதாரர்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், முன்னறிவிப்பிற்கு பிறகும் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் இருக்கும் தனியார் பட்டா நிலங்களில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசு முறை நடவடிக்கையின் மூலம் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்கான செலவினத் தொகையை இருமடங்காக சம்பந்தப்பட்ட உடைமைதாரர்களிடமிருந்து வசூலித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

  இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இரா.ராம்பிரதீபன்,  வட்டாட்சியர் சுகுமாறன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago