முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 506 எக்டர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளின் மூலம் இதுவரை மொத்தம் 8,506 ஹெட்டேர் பரப்பளவிலான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், தனியார் பட்டா நிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. வருவாய்த்துறையின் ஆவணங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் 36,289 ஹெட்டேர் பரப்பளவிலும், தனியார் பட்டா நிலங்களில் 68,658 ஹெட்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 1லட்சத்து 4ஆயிரத்து 947 எக்டேர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன.

அவற்றில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 2016-வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்ட கண்மாய்கள் தூர்வாரும் பணிகள், நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகள் உட்பட, தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவினைத் தொடர்ந்து போர்கால அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டு வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மூலம் இதுவரை மொத்தம் 8ஆயிரத்து 506  ஹெட்டேர் பரப்பளவிலான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நீர்பிடி பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிடும் விதமாக மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுப்பணித்துறை  மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள கண்மாய் பகுதிகளில் 9ஆயிரத்து 441.67 ஹெட்டேர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஏலமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுதவிர, தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளரே தனது சொந்த பொறுப்பில் வெட்டி அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில்  அரசு அளவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பத்திரிக்கைகள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், பொது அறிவிப்பு மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுநாள் வரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் உள்ள தனியார் நிறுவனங்கள்-உடமைதாரர்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டம் 133-ன் கீழ் முன்னறிவிப்பு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

எனவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago