முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் சிவஞானம், வழங்கினார்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் -  விருதுநகர் மாவட்டம்,சூலக்கரை காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1054  மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.15,91,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அ.சிவஞானம், வழங்கினார்கள்.

  விருதுநகர் மாவட்டம்,சூலக்கரை காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 76 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,20,000 மதி;ப்பிலான சக்கரநாற்காலிகளும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான காதொலி கருவிகளும், 929 பயனாளிகளுக்கு சுவாலம்;பன் சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 10 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளும், மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில அளவில் நடைபெற்ற பாரா தடகளப்போட்டியில் பதக்கங்கள் வென்ற 19 நபர்களுக்கு ரூ.21,750 மதிப்பிலான ரொக்கப்பரிசுத்தொகைகளையும்,  மாற்றுத்திறனாளிகளை கொண்டு வட்டார அளவில் ஆரம்பிக்கப்பட உள்ள தொழில்நுட்ப மைய வல்லுநர்களுக்கு  ரூ.10,000 மதிப்பிலான பழுது நீக்கும்  உபகரணங்கள் 3 நபர்களுக்கும், வீட்டு உபயோகப்பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி பெற்ற 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும், சணல் பொருட்;கள் தயாரித்தல் பயிற்சி பெற்ற 9 நபர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளை தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற ஊக்குவித்த புதுவாழ்வு திட்டத்தை சேர்ந்த 3 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆக மொத்தம் 1054  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,91,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  வழங்கி தெரிவித்ததாவது:-

  தமிழக அரசு புதுவாழ்வு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 27,754 மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமும், 3657 மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு திட்டத்தின் மூலமும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.9.72 கோடி நேரடி கடனாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு  அவர்கள் பல்வேறு தொழில்கள் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிற அரசுத்துறை மற்றும்  அரசு சாரா நிறுவனங்கள் மூலம்1.14 கோடி மதிப்பில் உபகரணங்கள் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு செயற்கை கை, கால்கள், காதொலி கருவிகள், கண்கண்ணாடி, ஊன்று கோல், மூன்று சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், சக்கர நாற்காலி என்று பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின்  சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 929 மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் சுயமாக தொழில் செய்ய வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நான்கு இயன்முறை பயிற்சியாளர்களை கொண்டு 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைப்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் இவர்களை ஊக்குவித்து இன்றுவரை மாநில அளவிலும், தேசிய அளவிலும் தடகள மற்றும் நீச்சல்  போட்டிகளில் கலந்து கொண்டு 121 பதக்கங்களை இதுவரை பெற்றுத்தந்துள்ளனர்.

 மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் கிடந்து முடங்கிவிடக்கூடாது. மனிதர்களுக்கு குறைகள் இருப்பது இயல்பு. நம்மிடம் இருக்கும் குறைகளை மீறி தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  மாற்றுதிறனாளிகளுக்கு செல்போன் பழுது நீக்கும்  பயிற்சி, மடிக்கணினி பழுது நீக்கும்  பயிற்சி , வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும்  பயிற்சி மற்றும்   சணல்  பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பயிற்சிகளையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாகவும், சிறப்பாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,தெரிவித்தார்கள்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) சண்முகராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், உதவி திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) ராஜகுமார், மண்டல மேலாளர்(நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்) வீரராகவன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்