முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் இன்று தைப்பூச தெப்ப திருவிழா

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,-: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை திருக்கோயிலில் நடைகள் திறப்பு நேரம் கோயில் நிர்வாகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா இன்று மாலையில் மாலையில் நடைபெறுகிறது.இத்திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் அதிகாலையில் 3 மணிக்கு நடைகள் திறக்கப்பட்டு 3.30 மணி முதல்  4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.பின்னர் தொடர்ந்து சுவாமி சன்னதியில் ஐந்து கால பூஜைகள் நடைபெறும். இதையடுத்து தைப்பூச தெப்பதிருவிழாவையொட்டி ஸ்ரீலெட்சுமணேசுவரர் தீர்த்தத்தில் நடைபெறும் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்கு திருக்கோயிலிருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் காலை 10.30 மணிக்கு  புறப்பாடகி  சென்றவுடன் கோயில் நடைகள் சாத்தப்படும். அதனைதொடர்ந்து மாலை 6 மணியளவில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,தீபாரதனை வழிபாடுகள் நடைபெற்று தெப்ப உற்சவ விழா தொடங்கப்பட்டு.11 முறைகள் சுவாமிகள் தெப்ப தீர்த்தத்தில் சுற்றி வலம் வந்து  பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமி,அம்மன் மலர் அலாங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து  திருக்கோயிலை இரவு சென்றடைந்தவுடன்  கோயில் நடைகள் திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜைகளும் பள்ளியறை பூஜைகள் நடைபெற்று பின்னர் திருக்கோயிலில் நடை சாத்தப்படும் என திருக்கோயிலின் இணை ஆணையர் செல்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago