முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிங்கிஸ்டி வியாதி உஷார்! உஷார்!! உஷார்!!

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

புதுப்புது வியாதிகளை கண்டு பிடிப்பதும் அதற்கு ஆய்வு செய்து மருந்துகள் தருவதும் தற்காலத்து பேஷனாகி விட்டது.இதில் தற்போது சேர்ந்துள்ள புதிய வியாதி ரிங்கிஸ்டி.சில சமயத்தில செல்போன் ரிங் ஆகிற மாதிரி அடிக்கடி தோணும். ஆனா எடுத்து பார்த்தா எந்த காலும் வந்திருக்காது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா...? அப்படின்னா உங்களுக்கு ரிங்கிஸ்டி வியாதி வந்திருச்சுன்னு அர்த்தம்.

எப்ப பார்த்தாலும் போனும் கையுமா அலையுறதாலதான் இந்த ரிங்ஸ்கிஸ்டி வியாதி வருதுன்னு அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க. இந்த வியாதியோடதான் உலகத்தில இருக்குற முக்காவாசி பேரே வாழ்றாங்களாம். இருப்பினும் இதனால பெரிய பாதிப்பு இல்லைன்னு சொல்றாங்க. ‘ரிங்ஸ்கிஸ்டி என்பது மூளை நமக்கு போடுற ஒரு தவறான உத்தரவு தானாம்.

சரி... இந்த ரிங்கிஸ்டி வியாதியில் இருந்து தப்புவது எப்படி...?

* ஒருநாளைக்கு சில மணி நேரங்களிலாவது செல்போன் உபயோகிக்காமல் இருங்கள்.

* படுக்கைக்கு தூங்க சென்ற பிறகு எக்காரணத்தை கொண்டும் செல்போனை உபயோகிக்காதீங்க.

* முடிந்தவரை இரவு நேரத்தில் செல்போனை அணைந்து விடுங்கள்.

* மூளைக்கு ஓய்வு கொடுங்க. அதிகமா யோசிக்காதீங்க.

* செல்போனை தலையணைக்கு பக்கத்தில வைச்சுக்காதீங்க.

* எப்பவுமே எதையாவது யோசிகிட்டே இருக்காதீங்க. ரிலாக்சா இருங்க.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்