முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடும் நடவடிக்கை முடியும் நிலையில் உள்ளது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

ராஞ்சி  - ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தால் புழக்கத்திற்கு புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடும் நடவடிக்கை ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உலகளவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றம் தேவை:
கடந்த நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை போக்கும் வகையில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதனால் படிப்படியாக ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு நீங்கி வருகிறது. இந்த நடவடிக்கை ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. தினமும் பணத்தேவையும் புழக்கமும் எவ்வளவு என்பதையும் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை இந்திய  ரிசர்வ்  வங்கி கண்காணித்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதால் உள்நாட்டில் நடக்கும் வர்த்தகம் மற்றும் வணிக முறையில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அருண்ஜெட்லி, டெபாசிட் எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுத்த பின்னர் அது விபரம் குறித்து மத்திய வங்கி வெளியிடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கவரனர் உர்ஜித் படேல் சமீபத்தில் கூறியுள்ளார் என்றார். இதற்கு எவ்வளவு காலம் தேவையோ அந்தளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி காலத்தை எடுத்துக்கொள்ளும் என்றார். இதற்கு மேல் நான் எதுவும் கூறமுடியாது என்றும் ஜெட்லி தெரிவித்தார். ரூபாய் நாட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் சுரங்கங்களுக்கு ராயல்டி கொடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெட்லி விதிமுறைகளின் படி ராயல்டி வழங்கப்படும் என்றும் ஜெட்லி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்