முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்1.பி விசா விவகாரத்தில் டிரம்பின் முடிவு இந்தியாவுக்கு நன்மையே : முகேஷ் அம்பானி கருத்து

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை   - தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான எச்1.பி விசா மீது டிரம்ப் விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவுக்கு நல்லதுதான் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கருத்து தெரிவித்துள்ளார்.

நாஸ்காம் மாநாடு
நாஸ்காம் நிறுவன கூட்டமைப்பின் மாநாடு மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி மற்றும் முன்னணி இந்திய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வரவேற்பு
இந்நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, “அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்1.பி விசா மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இம்முடிவு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வலு சேர்க்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தரும்” எனக் கூறினார். முகேஷ் அம்பானியின் கருத்தை டி.சி.எஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரும் ஆமோதித்துப் பேசினார்.

ஆதார் மூலம்...
மேலும், இணையதள வசதிகள் இந்தியாவுக்கு தற்போது அடிப்படை தேவையாக இருப்பதாகவும், இந்திய மக்கள் தொகை அதற்கேற்ப இயற்கையாக அமைந்துள்ளதாகவும் அம்பானி தெரிவித்தார். ஆதார் அட்டையில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாகதான் ஜியோ இணைப்பை 1 மில்லியன் பேர் இவ்வளவு விரைவில் பெற்றுள்ளதாகவும் அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago