முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் புதிய ரூ.1000 நோட்டுகள் அறிமுகமாகிறது

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - புதிய ரூ.1000 நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்லாது அறிவிப்பு
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை வங்கிகள், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வழியாக, திரும்பப் பெறப்பட்டு, ரிசர்வ் வங்கி கருவூலத்தில் சேர்க்கப்பட்டன

ரூ.1000 நோட்டுகள்
ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, ஓரளவு சில்லறை தட்டுப்பாட்டையும் மத்திய அரசு சீர்செய்தது. தற்போது, புதிய ரூ.1000 நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன. இதற்காக, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூ.1000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. முழுவீச்சில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.100 - ரூ.50 நோட்டுகள்
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளைப் போன்றே, ரூ.1000 நோட்டுகளும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதேபோன்று, ரூ.100 மற்றும் ரூ.50 புதிய நோட்டுகளும் விரைவில் அச்சடிக்கப்பட்டு, வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்