முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோ-ஆப்டெக்சில் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ திட்டம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, கோ–ஆப்டெக்சில் நடப்பாண்டிற்கான ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ‘‘கோ- ஆப்டெக்ஸ்” இந்தியா முழுவதும் 200 விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 82 ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.

கோ-–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப புதிய வடிவமைப்பு மற்றும் ரகங்களை வெளியிடுவதில் கோ-ஆப்டெக்ஸ் அனைத்து கைத்தறி நிறுவனங்களைவிட முன்னணியில் உள்ளது. 2015–-16ம் ஆண்டில் ரூ.313.38 கோடி விற்பனை சாதனையை எட்டியது. இதேபோல் இந்த ஆண்டும் ரூ. 325 கோடி விற்பனையை அடைய குறிக்கோளாக கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வ தற்காக முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதலின்படி. வாடிக்கையாளர்களிடையே கடந்த 4 ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்ற விற்பனையை அதிகரிக்கும் சீரிய திட்டமான ‘‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

இத்திட்டம் நெசவாளர்களின் துணி ரகங்களை அதிக அளவில் விற்பதற்கு ஏதுவாகவும் அவர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு அளித்திடவும் மிகவும் உதவிகரமாக உள்ளது.2017–ம் ஆண்டின் ‘‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” திட்ட துவக்க விழா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது. ‘‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்து இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் கோ-–ஆப்டெக்ஸ் துணி ரகங்களை வாங்கி நெசவாளர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.இவ்விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி. மனோகரன், மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ், கோ-ஆப்டெக்ஸ் துணைத் தலைவர் எஸ். ஜெயந்தி சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்