முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துன்பம் நீக்கி செல்வம் பெருக்கும் சுந்தரேஸ்வரர் பெருமாள்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

இந்த உலகில் செல்வம் இருந்தும் மனநிம்மதி இன்றி வாழ்பவர்கள் ஏராளம். அதுபோல் செல்வம் இல்லாமல்; வாழ்வில் முன்னேற முடியாமல் வாழ்க்கையை போராடி கழிப்பவர்களும் அதைவிட அதிகம் உள்ளனர். பணம் இருப்பவர்களுக்கு மனக்கஷ்டத்தை போக்கவும், அதேபோல பணத்தட்டுப்பாட்டுடன் வாழ்பவர்களுக்கு செல்வவளம் பெருக்க உதவும் திருத்தலம் ஒன்று உள்ளது.

திருத்தவத்துறை என்னும் லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் சென்னிவாய்க்காலில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி நாராயணபெருமாள் கோவில் தான் இந்த சிறப்புகளை பெற்று உள்ளது.

திருச்சியிலிருந்து திருத்தவத்துறை என்னும் லால்குடி வழியாக சாத்தமங்கலம் செல்லும் சாலையில் லால்குடியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நன்னிமங்கலம் சென்னிவாய்க்கால் கோவில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்திலிருந்து லால்குடி வழியாக சாத்தமங்கலம் ஆனந்திமேடு கிராமம் செல்லும் பஸ்ஸில் ஏறி நன்னிமங்கலம் சென்னிவாய்க்கால் சிவன்கோவில் என்று இறங்கவேண்டும். இந்த கோவில் செல்ல லால்குடி பஸ்நிலையத்திலிருந்து அதிக அளவில் ஆட்டோக்கள் உள்ளது. கோவிலுக்கு செல்லும் பேருந்து திருச்சி வழ ஆனந்திமேடு டவுன்பஸ் 80யு. லால்குடியிலிருந்து கோவிலுக்கு பஸ் புறப்படும் நேரம் காலை 6.00, 8.00, 10.30 மணி பகல் 1.10, 3.20 மாலை 5.40 மணி.

பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலம் முடிந்து நேரே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி, கரும்பச்சை வண்ணத்தில் பேரளவினராய் மரகத மேனியாய் அருள்பாலிக்கும் ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரே~;வரரை வலம் வந்து வணங்கி பின் ஆலய ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை அடிபிரதட்சனம் செய்து வழிபட்டால் ஸ்ரீ குபேர மூர்;த்தியின் அருட்கடாசத்துக்கு பாத்திரமாவார்கள் என்று இந்த வரிகள் திருவண்ணாமலை கோவிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டள்ளது. இதற்கு காரணம் ஸ்ரீ சிவபெருமான் குபேரனுக்கு அளித்த பொன் வில்வசாரம் இவ்வாலயத்தில் பன்மடங்காக பெருகி அற்புதம் அளித்ததே ஆகும்.

 

பொன்வில்வசாரம்

பொன்னாலாகிய மூன்று வில்வ தலங்களை உடைய பொன் வில்வசாரம் எந்த தேவலோகத்திலும் கிடைக்காத அருமை, பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு  லிங்கத்தின் மீது வைத்து ஓம் நமச்சிவாயா என்று  ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காக பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தை தரும் அற்புதம் உடையது ஆகும். குறித்த யோக, தவ, ஜெப சக்திகளை பெற்றிருப்பவர்களை தவிர இந்த பொன்வில்வ சாரமானது எவர் கண்களுக்கும் தென்படாது. ஏவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மஹிமையுடைய பொன் வில்வசாரத்தைச் சிவபெருமான் ஸ்ரீ குபேரனிடம் அளித்தார். இந்த அற்புதமான சிவன் அளித்த பொன்வில்ல சாரத்தை ஸ்ரீ குபேரன் தனது குமாரர்கள் மணிகிரீவன், நலகூபன் ஆகிய ஆகிய இருவரிடமும் அளித்து பூலோகம் எங்குமுள்ள சுயம்பு மூர்த்தி லிங்கங்களிடம் வைத்து வழிபட்டு இதன் மஹிமையை  அறிந்து வரும்;படி கட்டளையிட்டார். சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்களும் சிவ சேவகர்களுக்குமான ஸ்ரீ குபேரனின் புதல்வர்கள்  கண்களில் பொன்வில்வசாரம் தென்பட்டது. அவர்தம் கரங்களில் நிலைத்து நின்றது. இதைக்கண்டு ஸ்ரீ குபேரன் பெருமகிழ்ச்சி பெற்றார்.

திரு அண்ணாமலையார் அருள்வழி

சிவபெருமான் தன் தந்தைக்கு அளித்த தெய்வீக மருத்துவம் வாய்ந்த பொன்வில்வசாரம் எந்த சிவாலயத்தில் பன்மடங்காக பெருகும் தெய்வீக தன்மையுடையது என்ற தேவ ரகசியம் அறியாமல் பூலோகம் எங்குமுள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்புலிங்க மூர்த்திகளின் மீது வைத்து ஸ்ரீ குபேரனின் குமாரர்கள் நலகுகன், மணிகிரீவன் இருவரும் வழிபடி ஸ்வர்ண வில்வதலம், சாதாரண வில்வதலம் போல் பசுமையான காட்சிதர சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது. பலகோடி யுக தல யாத்திரையின் பயனாக கோடிக்கணக்கான சுயம்புலிங்க மூர்த்திகளை தரிசித்ததின் பலனாக அவர்களை பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக விளங்கும் திரு அண்ணாமலை அடையும் பேறுபெற்று பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து கலியுக மக்களுக்கு தேவையான தர்ம நிதி மற்றும் ~pப்ரநிதி செல்வத்திற்காக சங்கல்பம் செய்துகொண்ட ஸ்வர்ண வில்வதலத்தை ஓம் நமச்சிவாயா என்று ஓதி திருஅண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து இதன் மஹிமையையும், தெய்வீக ரகசியத்தையும் உணர்த்துமாறு மனமுருகி பிரார்த்தனை செய்தனர். திரு அண்ணாமலையாரிடம் வில்வதலம் ஸ்வர்ணயாக பிரகாசித்து மேலும் திரு அண்ணாமலையார், ஸ்ரீ குபேரன் குமாரர்களிடம் இதன் மஹிமையையும், தெய்வீக ரகசியத்தையும் அறிய வேண்டுமெனில்

“ தென்திசை   காவேரி இயல்சீர் சேர்

சென்னிச் சிவக்கயல் சுந்தரம் பார் ”   என்று அருள்வழி காட்டினார்.

ஸ்வர்ண வில்வசார மஹிமை

திரு அண்ணாமலையார் அருள்வழி காட்டியதில் மகிழ்வுற்ற இருவரும் தென்திசை நோக்கி பயனித்து ஏழ்தலம் புகழ்க் காவிரியார் விளை சோழமண்டல மீது உள் திருத்தவத்துறை என்னும் லால்குடியை அடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ சப்தரி~pஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர். நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் இன்னொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரங்களில் இருந்த பொன்வில்வ சாரமும் மறைந்துவிட்டதை கண்டு சிவன் சொத்திற்கு என்னவாயிற்றோ என்று பதறினர். எல்லாம் சிவனருள் என்று எண்ணி மூலஸ்தானம் நோக்கி சென்றனர்.

அங்கே ஓர் அற்புதத்தை கண்டு பரவசமும், பேரானந்தமும் கொண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் பேரளவினராய் மரகதம் போல் ஜொலிக்கும் சுயம்புலிங்க மேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன்மடங்காக பெருகி வாசைன நிறைந்து, ஸ்வர்ண வில்வ தலங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்து பிரகாசிக்க கண்டனர். ஓம் நமச்சிவாயா என்று ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி நிறைந்து பொலியக் கண்டனர். கரும்பச்சை வண்ண மரகத மேனியில் ஸ்வர்ணதளம் பன்மடங்கு பொங்கிப் பிரகாசித்ததைக் கண்டு பேருவுவகை அடைந்தனர்.

குபேரனருள்

தன் புதல்வர்களுக்கு தனக்கு கிட்டாத தரிசனம் கிட்டியது பற்றியும் பொன்வில்வசாரத்தின் மகிமையையும் அதன் தெய்வீக ரகசியத்தை உணர்ந்ததை பற்றியும் அறிந்து பெருமகிழ்ச்சியுற்ற ஸ்ரீ குபேரன் திரு அண்ணாமலை வாழ் அருள்வழி காட்டிய, தென்திவைக்காவேரி சோழமண்டலத்தில் உள்ள சென்னிவள நாட்டில் அருள்பாலிக்கும் கயல்விழிகளை உடைய ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் பெருமைகளையுணர்’ந்து இங்கு வந்து வழிபட்டார். மேலும் இவ்வாலயத்திற்கு பவுர்ணமி அன்று வந்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள் தம் வாழ்நாளில் முறையாக ஈட்டும் ஒவ்வொரு பைசா சம்பாத்தியத்திலும் பரிபூரண சக்தி நிறைந்திடவும் பரிபூரண லெட்சுமி கடாட்சத்தை பெறவும் தன்னுடைய சங்க பதும புண்ணிய சக்திகளையும் அவற்றின் ஆசீர்வாதங்களையும் கூட்டி அவற்றை நன்முறையில் பெருக்கி நிறைவுபெற செய்து செலவிடச் செய்யவும், வியாபாரம், தொழில், பதவி போன்றவற்றில் அதர்ம முறையிலும் லஞ்சம் மூலமும் பணம் சம்பாதித்து பணக்க~;டம் இல்லாவிடினும் மனக்க~;டப்படுவோரின் சகல தோ~ங்களையும் நீக்கி அவர் தம் ஈட்டிய பொருளில் தர்மநிதி மற்றும் ~pப்ரநிதியை நிறைத்து முறையான வழயில் தர்ம காரியங்களில் செலவிடச் செய்து சொத்தை பெருக்கவும் குபேரன் அருள்பாலிக்கிறார்.

குபேர நாக தேவதைகள்

பிரபஞ்சத்தின் அனைத்து கோடி நாகலோகங்களிலும் உள்ள நாகங்களுக்கு அதிபதியாக விளங்கும் ஸ்ரீ அஸ்தீக சித்தர் யோககன யாத்திரையில் வந்து வழிபடும் நித்ய பூஜை ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு குபேர சந்திர நாகங்களின் நடமாட்டம் அதிகம் ஆகும்.

இவ்வாலயத்தின் அருகேயுள்ள இவ்வாலயத்திற்கு சொந்தமான தோப்பில் பெரிய புற்று ஒன்று உள்ளது. பவுர்ணமி தோறும் திரளான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் பக்தர்கள் இந்த புற்று கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இன்றும் இவ்வாலயம் நாகங்கள் உலவும் இடமாக திகழ்கின்றது.

கல்வெட்டு கூறும் வரலாற்று தகவல்கள் 

இவ்வாலயத்திற்கு அருகில் செல்லும் சென்னிவாய்க்காலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நடுக்கல் ஒன்று இவ்வாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் கால நடுக்கல் ஆகும். வலது இடது புறங்களில் பல்லவர் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது. இந்த நடுக்கல் தௌ;ளாறெரிந்த மூன்றாம் நந்திவர்மனின் 21-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.867); அமைக்கப்பட்டதாகும். மேலும் இவ்வாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் மைசூர் நகரிலிருந்து ஹொய்சாலர்கள் இங்கு வந்து இவ்வாலய நிலங்களுக்கு மதகு அமைத்து கொடுத்து விவசாயம் தழைக்க உதவி செய்ததைக் கூறுகிறது. மிகப் பழமை வாய்ந்த கோவில் என்று இங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.  உள்மண்டப மேல்நிலையில் உள்ள கல்வெட்டு சோழர்காலத்தவை. குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தவை என கருதப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் சுமார் 1200 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என தெரியவருகிறது.

ஆலயஅமைப்பு 

சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்கள், தோப்புகளுக்கு நடுவில் மேற்கு நோக்கி சுமார் 5 அடி உயரத்தில் கரும்பச்சை வண்ணத்தில் மரகத மேனியாய் ஸ்ரீ சுந்தரே~;வரர் அருள்பாலிக்கிறார். ஆலய ஸ்தல விருட்சம் பொன்வில்வ மரமும், அதனருகில் மகிழமரமும் உள்ளது. மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ஏறக்குறைய சுமார் 15 தினங்களுக்கு மாலையில் சூரிய கதிர்கள் இறைவன் மீது நேராக படும்போது கரும்பச்சை வண்ணத்தில் இறைவன் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாகும். இவ்வாலயத்தில் காண்பிக்கப்படும் தீபஆராதணை லிங்கத்தில் பட்டு பிரதிபலித்து லிங்கததில் ஒளிப்பிழம்பாக ஜெக ஜோதியாக தெரிவதைக்காண கண் கோடி வேண்டும்.

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலம் முடிந்து இவ்வாலயத்திற்கு வந்து வழிபடுகின்றனர். பௌர்ணமி அன்று திரளான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து ஆலய ஸ்தலவிருட்சம், பொன்வில்வ சாரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் பூசி அடிப்பிரதட்சணம் செய்து பின் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வணங்கி வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை பெற்று செல்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் பணகஷ்டம் மற்றும் மனக்கஷ்டம் நீங்கி வளமுடன் வாழ பௌர்ணமியன்று இங்கு வந்து வில்வமரத்தை அடிபிரதட்சணம் செய்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரே~;வரரை வலம் வந்து வணங்கி செல்கின்றனர்.

இத்திருக்கோவிலின் செயல் அலுவலராக முத்துசாமி, பரம்பரை அறங்காவலராக என்.சியாமளா ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர்.

இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு 1.2.2016-ல் நடைபெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்