முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தின் எதிர்காலத்தை இந்த தேர்தல் நிர்ணயிக்கும்: அமித்ஷா

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் நிர்ணயிக்கும் என பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல்

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலானது நாளை நடைபெற உள்ளது. 52 தொகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது.

எதிர்காலத்தை நிர்ணயிக்கும்

இந்நிலையில், லக்னோ அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த சட்டசபைத் தேர்தல் வெறும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல். 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது?. ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரு இளவரசர்களின் கதைகள் தனித்துவமானது. ஒருவர் (ராகுல் காந்தி) தனது தாயாருக்கே சரியான சவாலாக இருந்து வருகிறார். இன்னொருவர் (அகிலேஷ்) தனது தந்தையிடம் பிரச்சனை செய்தே வருகிறார். இவர்களின் பிரச்சனையால் மாநிலம் கவலை கொண்டு வருகிறது.

இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்