முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் தீ விபத்து - 2 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

மத்திய படை பாதுகாப்பு

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலும் ஒன்று. இங்குள்ள ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

பராமரிப்பு பணிகள்

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் இருந்த கோவிலின் நிர்வாகம் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவினரிடம் உள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இக்கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் தொல்லியியல் துறை அலுவலகமும், ஒரு தபால் நிலையமும் உள்ளது. நேற்று அதிகாலையில் இங்கிருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இருவர் காயம்

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் பாதுகாவலர்களும் அங்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்புவீரர் மற்றும்ஒரு கோவில் பாதுகாவலர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்திற்கு திருவனந்தபுரம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தீ விபத்து பற்றி விசாரணை நடத்தினர். இதில், வடக்கு வாசல் பகுதியில் பழைய பொருட்கள் சேகரித்து வைத்திருந்த கிட்டங்கியில் இருந்து தீப்பிடித்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், ஏராளமானோர் அங்கு திரண்டு விட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்களும் இச்சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago