முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இனி சிறுவர்கள் - முதியவர்களுக்கு அனுமதி இல்லை

புதன்கிழமை, 1 மார்ச் 2017      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி, அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை வழிபட செல்லும் யாத்திரையில் சிறுவர், சிறுமிகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள குகையில் பனி லிங்கத்தை தரிசிக்க வருடந்தோறும் பக்தர்கள் லட்சக்கணக்கில் யாத்திரையாக செல்வார்கள். இந்தாண்டு யாத்திரை வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு நகர் மற்றும் ஸ்ரீநகரில் இருந்துதான் யாத்திரை செல்ல வேண்டும். இமாசலப்பிரதேசத்தில் இருந்தும் செல்லலாம். ஆனால் இது தொலைவு அதிகமாகும்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

பல கட்டுப்பாடு

மேலும் இந்தாண்டு யாத்திரை மேற்கொள்ள பல கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு விதித்துள்ளது. அதன்படி 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள், 75 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் யாத்திரைக்கு வரக்கூடாது. அமர்நாத் யாத்திரை செல்லும் பகுதியில் காலநிலையை கணித்துக் கூற முடியாது. சில நேரங்களில் குளிர் அதிகரித்துவிடும் 5 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக குளிர் அடிக்கத்தொடங்கிவிடும். அதனால் ஆடைகள் விஷயத்தில் கவனமாக இருக்கும்படியும் பக்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

பெண்கள் சேலை அணியக்கூடாது. அதற்கு பதிலாக பேண்ட், சர்ட் மற்றும் சுடிதார் இவைகளை அணியலாம். பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவுப்பொருட்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் நனைந்துவிடாதபடி பாதுகாப்பாக கட்டி கொண்டு வரவேண்டும். பிளாஷ்டிக் பைகளை கொண்டுவரக்கூடாது. பிளாஷ்டிக் பைகளுக்கு ஜம்மு-காஷ்மீரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கொண்டுவந்தால் தண்டனை வழங்கப்படும். பெண்கள் கர்ப்பம் அடைந்து 6 வாரத்திற்கும் கூடுதலாக இருந்தால் அவர்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பாதுகாப்பாகவும் குளிரை தாங்கும்படியும் உல்லனாலான ஆடைகளை அணிந்தும் கொண்டு வருவதும் நல்லது. கொடை, மழைக்கோட்டு கொண்டு வருவதோடு, தண்ணீர் புகாதபடி சூ அணிந்திருக்க வேண்டும். அடையாள அட்டைகளையும்  யாத்திரைக்கான அனுமதி சீட்டு ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும். கூட்டமாக சேர்ந்து வருபவர்கள் பெரும்பாலும் பிரிந்து செல்வதை தவிர்த்து ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்