முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது: திருநாவுக்கரசர் கருத்து

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, அஸ்திவாரமே இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

வடமாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
மாநில சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் அங்கு யார் ஆட்சியில் இருந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள். எதிர் கட்சிகள் எப்படி செயல்பட்டன. உள்ளூர் பிரச்சனைகள் என்ன? என்ற அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இதற்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே மோடிக்கும், காங்கிரசுக்கும் நடந்த பரீட்சையாக கருத முடியாது. உ.பி.யை பொறுத்தவரை ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம். ரூபாய் நோட்டு பிரச்சனை நடுத்தர வர்க்கத்தை மிகவும் பாதிக்கத்தான் செய்தது.

ரூபாய் நோட்டு பிரச்சனையால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி பார்த்தால் பஞ்சாபில் அதனால்தான் பா.ஜனதாவை மக்கள் தோற்கடித்தார்கள் என்று சொல்ல முடியுமா? பாராளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் முழுக்க முழுக்க மாநில பிரச்சனையை முன் வைத்து நடப்பது.உ.பி.யில் 15 வருடமாக முலாயம்சிங்கும், மாயாவதியும் ஆட்சியில் இருந்து இருக்கிறார்கள். பா.ஜனதாவும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி. எனவே வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பஞ்சாப், கோவாவில் இருந்த ஆட்சியை இழந்து இருக்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் அஸ்திவாரமே கிடையாது. எப்படி கட்டம் கட்ட முடியும்? இங்கும் மாற்றம் வரும். ஆனால் அது பா.ஜனதாவுக்கு ஆதரவாக வராது. பா.ஜனதா இங்கு காலூன்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்