முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாம்பூக்களைத் தாக்கும் தத்துப்பூச்சிகள்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளைம், திருவில்லிபுத்தூர், வத்ராப் வட்டாரங்களில் பெருமளவில் மா விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. பூக்கள் பூக்கும் தருணத்தில் சில மரங்களில் தத்துப்பூச்சிகள் பூக்களை தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.

இப்பூச்சிகளின் குஞ்சுகளும் வளர்ந்த தத்துப்பூச்சிகளும் பூங்கொத்துகளின் சாற்றை உறுஞ்சுவதால் பூக்கள் வாடி கருகி உதிர்ந்து விடும். தத்துப்பூச்சிகளின் குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை சுரப்பதால் இலைகளிலும், பூங்கொத்துகளிலும் தேன் துளி திரவத்தை காண முடியும்.

தத்துப்பூச்சிகளின் தேன்துளி திரவத்தினால் கேப்னோடியம் என்ற பூஞ்சாணம் மா இலைகளை தாக்குவதால் அதன் மேற்பரப்பு கருமையாக மாறி இலைகள் ஒளிச்சேர்க்கை செய்ய இயலாமல் இறுதியில் காய்ந்து உதிர்ந்துவிடும்.

இந்த தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மி.லி மருந்துடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து அல்லது கார்பரில் 3 கிராமுடன் 1 லிட்டர் தண்ணீர் அல்லது பாஸ்போமிடான் 1 மி.லி மருந்துடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து மற்றும் பூஞ்சாணைத்தை கட்டுப்படுத்த காப்பர்ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் ஒட்டும் திரவம் டீபால் கலந்து பூக்கும் தருணத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை பூ மற்றும் இலைகள் முழுவதும் நனையும்படும்படி காலை மற்றும் மாலை நேரங்களில்; டேங்க் ஒன்றிற்கு 5 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.

கரும்படல பூஞ்சாணத்தை நீக்க 1கிலோ ஸ்டார்ச் அல்லது மைதாவை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க விட வேண்டும், ஆறிய பிறகு 25 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.


 ச.தமிழ்வேந்தன், பி.எஸ்.ஸி (தோ.க.),  
தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ)
 விருதுநகர்  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்