முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் போது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

வெற்றியை எதிர்பார்த்தோம்
டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:- “ பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூட  ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. இது எப்படி தவறாக சென்றது. சில இடங்களில் எங்கள் கட்சி தொண்டர்கள் எண்ணிகையை விட குறைவான வாக்குகள் விழுந்துள்ளன.

இயந்திரங்களில் முறைகேடு
ஆம் ஆத்மியினுடைய 20-25 சதவீத வாக்குகள் அகாலி-பாஜக கூட்டணிக்கு விழுந்துள்ளன. வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதால் சில வெளிநாடுகளில் இயந்திர வாக்குப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. நியாயமான தேர்தல் இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்றால்  அதே நடைமுறையை கைவிட வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்று ஒருவார்த்தை கூட எங்கும் எழவில்லை. இருப்பினும் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கருத்துக்கணிப்புக்கு மாறாக ...
பஞ்சாப்பில் என்ன நடைபெற்றது என்று உண்மையாகவே தெரியவில்லை. வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், நமது உச்ச நீதிமன்றம் மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 77 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பஞ்சாப்பில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்