முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி மொபைல் எண் இணைப்பு பெற ஆதார் கட்டாயம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - புதிதாக மொபைல் எண் இணைப்பு பெறவும், பழைய வாடிக்கையாளர்கள் மொபைல் எண் சேவையை தொடர்ந்து பெறவு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஆதார் சார்ந்த கேஒய்சியை(வாடிக்கையாளரின் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள்) தங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தொலைதொடர்பு துறை சார்பில் அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ஆதார் இணைக்கப்பட்ட இ-கேஒய்சி மூலம் மொபைல் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரிக்கும் அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பினால் நாட்டின் 100 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் பயனாளிகளிடம் ஆதார் விவரங்கள் பெறப்படும் என்று கூறப்படுகிறது. இதைச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.2,500 கோடியை, சேவை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கும். ஆதாரை அடிப்படையாகக் கொண்ட இ-கேஒய்சி செயல்பாடுகள், பிப்ரவரி 6, 2018-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவையை மட்டுமே பெறுவதற்காக மட்டுமே வாங்கப்பட்ட மொபைல் இணைப்புகள், மாற்று எண்கள் மூலம் சரிபார்க்கப்படும். பான் கார்டு பயன்பாட்டுக்கு ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்புக்குப் பிறகு, தொலைதொடர்புத் துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago