முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் விழா ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

 தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் எதிர்வரும் 09.05.2017 முதல் 16.05.2017 வரை சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (05.04.2017) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது.
 கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது. திருவிழாவின் போது தேரின் எடைக்கு தகுந்தவாறு மின்சாரம் பாயாத பொருட்களைக் கொண்டு தேரின் வடம் தயார் செய்திடவும், தேரோடும் சாலைகளை மேடுபள்ளமின்றி தேரின் எடையைத்தாங்கும் வண்ணம் அமைத்திடவும், பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடம் முதல்  அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரையும,; கடந்த ஆண்டை காட்டிலும், இவ்வாண்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுவதால் பாதுகாப்பு பணியில் அதிகமான ஆண், பெண் காவலர்களையும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களையும் பணியில் ஈடுபடுத்திடவும், காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், உயர் கோபுரம் அமைத்தும் பாதுகாப்பு பணி;கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
 மேலும், பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று வர இடையூறு ஏற்படாத வண்ணம் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்திடவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கடைகளை அமைத்திடவும், தீயணைப்புத்துறையினர் விழா காலங்களின் போது போதுமான அளவு தீயணைப்பு வாகனங்கள், தீத்தடுப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திடவும், சுகாதாரத்துறையினர் கோயில் வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் 24 மணிநேரமும் நிறுத்தி வைத்து தேவையான மருத்துவ வசதிகள் மருத்துவக்குழுவினரைக் கொண்டு 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கிடவும், பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மனை தரிசிக்க ஏதுவாக தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தி சிறப்பு பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்படவும், தற்காலிக கழிவறைகள் தேவையான அளவு ஆங்காங்கே அமைத்திடும் பணி;கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
 பக்தர்கள் தீச்சட்டிகள் இறக்கும் இடத்தில் குவியல் ஏற்படாமல் இருப்பதற்காக ஊராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்திடவும்;, தற்காலிக உணவு தயாரிப்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்; மூலம் தற்காலிகச்சான்றிதழ் வழங்கிடவும், சரக்கு வாகனம், லாரி போன்றவற்றை மாற்றுப்பாதையில் திருப்பி விடவும், கோயில் திருவிழாவில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உணவு வழங்கிடவும், போதுமான இடைவெளியில் ராட்டினம் அமைத்திடவும், ராட்டினம் பயன்படுத்தும் சுமார் 50 நபர்கள் அளவில் விபத்து காப்பீடு செய்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப.,  தெரிவித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் , மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் , இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் , பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்ப்பொறியாளர் கணேஷன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம் , வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் , திருமதி.இரா.ஆனந்தி , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணைப்பொறியாளர் ராஜசேகர் , வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் , வட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் ஆனந்தன் , தமிழ்நாடு மின்சார வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் கணேஷ்குமார் , தேனி வட்டாட்சியர் ஷேக்அயூப் , வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் , வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago