முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழிகாட்டி கையேடு மற்றும் குறுந்தகடு அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது க லெக்டர் சிவஞானம் தகவல்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணாக்கர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்தார்கள்

விருதுநகர் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில்; பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில்; நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணாக்கர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு, அரசுத்துறை மற்றும் தனியார்; நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பிற்கு எப்படி செல்வது, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து, விருதுநகர் மாவட்டத்தில் (இன்று) 06.04.17 நகர்ப்புற மாணவர்களுக்கு பல்வேறு துறையின் மூலமாக, அதாவது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், வேளாண்மைக் கல்;லூரி முதல்வர்கள், மருத்துவர்கள், அரசு  முதல்வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்புத்துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்களால், இந்த வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், மாணாக்கர்கள் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள ஏதுவாக பேருந்து வசதிகளும், மாணாக்கர்கள் எளிதாக பயன்பெற மத்திய, மாநில அரசுப்பணியிடங்களுக்கு செல்ல என்னென்ன கல்வித்தகுதிகள், என்னென்ன துறைகள் உள்ளது, உயர்மதிப்பு பெற்ற தனியார் நிறுவனத்தின் முகவரிகள் என பல்வேறு தகவல்கள் அடங்கிய வாழ்க்கை வழிகாட்டி கையேடு மற்றும் குறுந்தகடு அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக இலவச மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற மாணவர்களுக்கு இன்று(06.04.17) நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ஒன்றியம் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணாக்கர்களும், சாத்தூர் ஒன்றியம் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 470 மாணாக்கர்களும், விருதுநகர் ஒன்றியம் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2600 மாணாக்கர்களும், சிவகாசி ஒன்றியம் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 1360 மாணாக்கர்களும், திருவில்லிப்புத்தூர் ஒன்றியம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 800 மாணாக்கர்களும், இராஜபாளையம் ஒன்றியம் பி.எ.சி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 713 மாணாக்கர்கள் என மொத்தம் 7243 மாணாக்கர்கள் கலந்துகொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.

நாளை (07.04.17) கிராமப்புற மாணவர்களுக்கு காரியாபட்டி ஒன்றியத்தில் அமலா உயர்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஒன்றியத்தில் நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியிலும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலசலிங்கம் பல்கலைகழகத்திலும்; நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து மாணாக்கர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களுக்குரிய கல்வி, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், கேட்டுக்கொள்கிறார்கள்   

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்,இ.கா.ப., முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago