முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட ஊரகப்பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகள் கலெக்டர் வீர ராகவ ராவ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவக்கழக அரங்கத்தில் நடைபெற்ற ‘கனவு மெய்படல்’; நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இன்று (06.04.2017) மதுரை மாவட்ட ஊரகப்பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகள் என அறிவி;த்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டத்தில் 1946 குக்கிராமங்களை உள்ளடக்கிய 420 ஊராட்சிகளிலும் தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் மூலம் சமூக ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழிநடத்துநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் கூடிய செயல்பாட்டால் மதுரை மாவட்டம் சுகாதார பாதுகாப்பில் (ளுயnவையவழைn ஊழஎநசயபந) 30 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மொத்தம் 3,44,592 (97மூ) தனிநபர் இல்ல கழிப்பறைகள் உள்ளன.  மீதமுள்ள 3மூ மக்கள் பயன்பாட்டிற்கென பொது கழிவறைகள் மற்றும் பகிர்ந்து பயன்படுத்தும் கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதால் மனித மலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மட்டுமே 1,45,371 தனிநபர் இல்ல கழிப்பறைகள் மற்றும் 492 பொது சுகாதார கழிப்பறைகள் மற்றும் தொடர் கழிப்பறைகளும் தேவையான இடங்களில் கட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  மதுரை மாவட்டத்தை மாசுஇல்லாத, நோய் இல்லாத மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.  இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குபவர்கள் மாணவ, மாணவியர்கள்.  திறந்தவெளி மலம் கழிக்கும் இல்லாத மாவட்டம் என்பதனை தொடர் கண்காணிப்பின் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்திடல் வேண்டும்.  
 இன்று தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட பட்டியலில் மதுரை முதல் மாவட்டமாக திகழ்வதற்கு முக்கிய காரணமான மாவட்ட ஊரக முகமைப் பணியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணிவகள், தன்னார்வத்தொண்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 திறந்த வெளியில் மலம் கழிக்கும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்ற எனது கனவானது, தற்பொழுது மதுரை மக்களின் கனவாக மாறி முழுமை பெற்றுள்ளது.  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் புதுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட நிர்மல் மதுரை, சிறப்பு சுகாதாரப் பொங்கல், அஞ்சல் அட்டை இயக்கம், சுகாதார மேளா, சுகாதார திருவிழா, கட்டடப்பணியாளர் பயிற்சி, சுகாதார யாத்திரை, பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து கழிப்பறை கட்டுதல், பள்ளிகளில் ஓ.டி.எப் வருகைப்பதிவேடு, பேசும் கழிப்பறை (வுயடமiபெ வுழடைநவ)இ பள்ளிக்குழந்தைகள் மூலம் அடம் பிடித்தல் இயக்கம், திறந்த வெளியில் மலம் கழித்தல் எனும் சிறையிலிருந்து விடுதலை, மக்களுடன் மருத்துவர்களின் சுகாதார சந்திப்பு, ஓ.டி.எப் செல்பி மற்றும் ஓ.டி.எப் வரைப்படம் மூலம் கண்காணிப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மதுரை மாவட்டமாக மக்களின் கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது.
 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட ஓ.டி.எப் பாரோ மீட்டர் கருவியானது ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வைக்கப்படும்.  இக்கருவியில் 100 சதவீதம் கழிப்பறை அணுகல், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் நடைபெறாத இடம், தொடர் கண்காணிப்பு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத இடம், ஓ.டி.எப் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற நிலைகளை காட்டும்.  தொடர் கண்காணிப்பின் மூலம் இந்நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார்.                                  ..3..

முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து சுகாதார ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழி நடத்துநர்கள் ஓ.டி.எப் நிலையினை எய்திய தீர்மானங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தார்கள். 

கூடுதல் ஆட்சியர் அவர்களால் சுகாதார அளவினை கணக்கீடு செய்வதற்கு உருவாக்கப்பட்ட சிறந்த “ழுனுகு டீயுசுழுஆநுவுநுசு” கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் எஸ்.சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  உதவி திட்ட அலுவலர்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எஸ்.பொன்னம்மாள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., இணை இயக்குநர் ஃ மகளிர் திட்ட அலுவலர் க.அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பி.செல்வராஜ், புதுவாழ்வுத்திட்ட மேலாளர் ஆர்.சுபாஷ் பாபுநாத் மங்களம், துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.வி.அர்ஜுன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்