முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் - பக்தர்கள் வெள்ளம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
Image Unavailable

திண்டுக்கல் : பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் விண்ணைப் பிளக்கும் அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமான் ஞிந்தி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமே கோடையில் முருகப்பெருமானை குளிர்விக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடியை பக்தர்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாகும். அதன்படி இவ்வருடத்திற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 3ம் தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் முருகப்பெருமான் பலவித வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 6ம் நாள் விழாவாக முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலை 4.30 மணிக்கு சாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு தீர்த்தம்வழங்குதலும், 8.55 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 4.20 மணிக்கு சிறப்பு ஞீஜைகளுக்கு பின் முருகப்பெருமான் திருத்தேரேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா என்று சரண கோஷம் எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டும் அளவில் இருந்தது. அதனைத்தொடந்து பக்தர்கள் தேரை இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேர் சன்னதி வீதி, கிரிவீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ஞிந்தி வந்து முருகப்பெருமான் அருளாசி வழங்கினார். 

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், பல்வேறு காவடிகள் எடுத்தும் வந்தனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகமும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது. மேலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் பழனியில் இருந்தும் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி நகரமே விழாக்கோலம் ஞீண்டிருந்தது.

வரும் 12ம் தேதி புதுச்சேரி சப்பரத்தில் வீதியுலாவும், அன்றிரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவீதியுலா காட்சியையும் தொடர்ந்து இரவு 11 மணிக்கு கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது.

 பழனி பங்குனி உத்திரத் தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்