முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய தமிழிசை கோரிக்கை

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

திருப்பூர்  - திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

வலுக்கும் எதிர்ப்பு
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யக் கோரியும் சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.

தமிழிசை ஆதரவு
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும். மதுக்கடையை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை கண்மூடித்தனமாக பாண்டியராஜன் தாக்கியுள்ளார்.

பணி நீக்கம் செய்யவேண்டும்
 ஏ.டி.எஸ்.பியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி ஒரு டாஸ்மாக் கடையைக் கூட திறக்க பாஜக அனுமதிக்காது என்றும் தமிழிசை உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்