முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் பகுதியில் இலவம் நெத்துகள் அறுவடை தொடக்கம்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரவெள்ளாலபட்டி, வலையபட்டி, இடையபட்டி, எர்ரம்பட்டி, கோவில்பட்டி, சாத்தியாறு அணை, அய்யூர், மறவபட்டி, சரந்தாங்கி சேந்தமங்கலம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் சாலையின் ஒரங்கள், குளfகரைகள், கண்மாய் சரிவுகள் மற்றும் பட்டா நிலங்களிலும் ஆங்காங்கே இலவம் மரங்கள் பயிரிடப்பட்டு மரங்களாக உள்ளன.

இந்த மரம் கடும் வறட்சியை ஏற்றுf கொள்ள கூடியதாகும். இந்த வருடம் கடும் வறட்சியினாலும், பருவமழை சரிவர பெய்யாமல் பொயத்து போய்விட்ட காரணத்தினால் இந்த இலவ மரங்கள் அதிகளவில் விளைச்சல் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பிஞ்சு பிடிக்க தொடங்கி ஏப்ரல் மாதம் அறுவடைக்கு வருவது வழக்கம் அதன்படி தற்போது இலவம் நெத்துக்கள் அறுவடையாகி வருகிறது. இதுகுறித்து விவசாயி மறவபட்டி மாரிச்செல்வம் கூறியதாவது.

இந்த மரத்தில் பட்டைகளும், விதைகளும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். மேலும் இலவம் பஞ்சுகள் நூற்பதற்கு ஏற்றதல்ல, இந்த பஞ்சை பயன்படுத்தி மெத்தைகளும், தலையணைகளும் உருவாக்கினால் பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். தூங்கும் சுகத்திற்கு இது முழுமையான பயன் உள்ளதாகும்.

பக்கவிளைவுகள் ஏதும் வராது, தவிர விளக்குகள் எறிவதற்கு இந்த திரிகள் பயன்படுத்தப்படும். மேலும் இந்த இலவங்காய்கள் பழுக்கும் தன்மையற்றது. காய் நெற்றாகி பஞ்சு வெடிப்பது வழக்கம், பழம் பழுக்கும் அதை உண்டுவிடலாம் என்ற எண்ணத்தில் காத்திருக்கும் கிளிகள் ஏமாந்து போய்விடும். இதற்குதான் இலவு காத்த கிளி போல என்று மரபு சொற்கள் இன்றளவும் உள்ளது.

இது அலங்காநல்லூர், பாலமேடு வட்டாரத்தில் விளைச்சலாகி தற்போது அறுவடையாகி வருகிறது. ஒரு நெத்து அறுபது பைசா முதல் ருபாய் 1 வரை விற்பனையாவதாகவும் அதேநேரம் ஒருகிலோ நெத்து ருபாய் 8 முதல் 10 வரை விலைபோவதாக தெரிகிறது. தவிர கூலியாட்களின் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் இந்த நெத்துகள் பறிக்கப்படாமல் அப்படியே மரத்தில் வெடித்து சிதறுகிறது. இருப்பினும் எப்படியாவது விவசாயிகள் இந்த நெத்தை பறித்து விற்பனை செய்து வருகின்றனர்,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்