முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு முன்னரே புதிய ரூ.500,ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது: ரிசர்வ் வங்கி தகவல்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, உயர்மதிப்புள்ள ரூ.500,ரூ.1000 செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பே புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் கணிசமான அளவுக்கு அச்சடிக்கப்பட்டு இருப்பில் வைத்திருந்தோம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி உயர்மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டில் கறுப்புப்பணம், கள்ளப்பணம்,தீவிரவாதிகள் வைத்திருக்கும் பணத்தை ஒழிக்கவே இந்த உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரிடம் நிதிக்கான பாராளுமன்ற நிலைக்குழு விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த கவர்னர் உர்ஜித் படேல் கூறுகையில் கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அன்று உயர்மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தற்கு முன்பே கணிசமான அளவுக்கு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அச்சடித்து ரகசியமாக வைத்திருந்தோம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனையை பதிந்து வைக்கவில்லை. ரகசியத்தை காக்கவே இவ்வாறு செய்யப்பட்டது. அதேசமயத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பணப்பரிமாற்றம் மற்றும் மக்களுக்கு ஏற்படும் அசெளரியங்களை முடிந்த அளவு போக்கவும் முன்கூட்டியே புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது.  புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க தேவையான வங்கி பேப்பர், இங்க் மற்றும் உபகரணங்கள் குறித்து அவ்வப்போது மத்திய அரசுடன் விவாதிக்கப்பட்டது என்றும் எழுத்துமூலமாக உர்ஜித் படேல் பதில் அளித்துள்ளார். பின்னர் அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதை சமாளிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் புதிய ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கினோம்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது 17 ஆயிரத்து 165 மில்லியன் ரூ.500 நோட்டுகளும் 6 ஆயிரத்து 858 மில்லியன் 1000 ரூபாய் நோட்டுகளும் மொத்தத்தில் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன்-மத்திய அரசுக்கு இடையே விவாதம் தொடங்கிவிட்டது என்றும் இதுகுறித்தும் எந்தவித பதிவும் இல்லை என்றும் கவர்னர் உர்ஜித் படேல் மேலும் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்