முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரில் காணாமல் போனவர்கள் விபரம் கோரி இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் முழுஅடைப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு  - இலங்கை ராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்களைத் திருப்பி அளிக்க வேண்டும், போரின்போது காணாமல் போனவர்கள் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.  இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. போர் நிறை வடைந்து 8 ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக ஏராள மான தமிழர்கள் அடைக்கப்பட் டுள்ளனர். பல்வேறு போராட்டங் களுக்கு பிறகும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

மேலும் தமிழர் பகுதியான வடக்கு, கிழக்கில் பெரும் பான்மையான நிலங்கள் இன்னமும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. அவை திருப்பி அளிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன்காரணமாக யாழ்ப்பாணம், திருகோணமலை உட்பட பல்வேறு நகரங்கள் வெறிச்சோடின. கிளிநொச்சியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.  வடக்கு, கிழக்கு மாகாணங் களில் மத்திய அரசு அலு வலகங்கள் மட்டும் செயல் பட்டன. மாகாண அரசுகளின் அலுவலகங்கள் செயல்பட வில்லை. சாலைகளில் இருசக்கர வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்