முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா சவால்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்  - அணுஆயுத சோதனையை கைவிட மாட்டோம், போருக்குத் தயாராக உள்ளோம் என்று வடகொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.  வடகொரியா 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அணுஆயுத சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.   அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன், நீர் மூழ்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மிக்ஸிகன் ஆகியவை தென்கொரியாவில் முகாமிட்டுள் ளன. வடகொரியாவின் ஏவு கணை தாக்குதலைச் சமாளிக்க அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சாக் சோல் வான் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அணுஆயுத சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம். எத்தகைய போருக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே வடகொரிய வெளியுறவு அமைச்சகம் 10 தென்கிழக்கு நாடுகளுக்கு ஓர் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதில் அணுஆயுத போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது. அதைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற செனட்டர் களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் போர் வியூகம் குறித்து எதுவும் விவாதிக்கப்பட வில்லை. எனினும் சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு நெருக்கடி அளிப்பது, அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தென்கொரியா அருகே முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்க்கப்பல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago