முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா நாட்டில் வீரதீரச்செயல்களில் ஈடுபட்ட பெண் கைது

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஒட்டோவா  - கனடா நாட்டில் யாரும் எளிதில் செய்ய முடியாத காரியத்தை துணிச்சலாக செய்து வியக்க வைத்த இளம்பெண் ஒருவர் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

போலீசாரால் கைது
கனடாவில் உள்ள டோரன்டோ  நகரை சேர்ந்த மரிசா லாசோ என்ற 22 வயதான இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பல அடி உயரம் உள்ள இரும்பு கிரேனில் பல மணி நேரம் தனியாக அமர்ந்திருந்து பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். இளம்பெண்ணை கைது செய்த பிறகு இவரைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரதீரச்செயல்கள்
சிறுவயது முதல் வீரதீரச்செயல்களில் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்பார் என்றும், திரில்லாக இருப்பதற்காக யாரும் செய்ய முடியாத பல செயல்களை செய்வார் எனவும் தெரியவந்தது. நண்பர்கள் சிலரிடம் விசாரணை செய்தபோது. இளம்பெண் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருப்பது, உயரமான கட்டத்தின் உச்சியில் நிற்பது, மின்கம்பிகளுக்கு மத்தியில் கால்களை தொங்க விட்டவாறு அமர்ந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்களை அளித்து போலீசாரிடம் விளக்கியுள்ளனர்.

ஜாமீனில் விடுதலை
இளம்பெண்ணிற்கு துணிச்சல் அதிகமே தவிர பிறருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுப்பட மாட்டார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பல மணி நேரம் கிரேனில் அமர்ந்திருந்து இளம்பெண்ணை பற்றி தான் தற்போது கனடாவில் பரபரப்பாக பேசிவருகிறார்கள். போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அப்பெண் சில நிபந்தனைகள் மற்றும் 500 டொலர் பினையாணையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago