முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை சோதனையை கைவிட வடகொரியாவை சீனா வலியுறுத்துகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மே.1 ஏவுகணை சோதனைகளை கைவிடும்படி வடகொரியாவை சீனா வலியுறுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடையை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையையும் அணுஆயுத சோதனையையும் நடத்தி வருகிறது. இது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அதனால் தனது நட்பு நாடான தென்கொரியாவை காப்பாற்ற அமெரிக்க விமானந்தாங்கி போர்கப்பலை கொரிய தீபகற்ப பகுதிக்கு வந்துள்ளது. வடகொரியா அமெரிக்காவை குறிவைத்தும் ஏவுகணையை தயாரித்து வருகிறது. இதுதொடர்ந்தால் வடகொரியா மீது போர் தொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் வடகொரியாவை ஏவுகணை சோதனையை நிறுத்திவைக்கும்படியும் சீன வலியுறுத்தி வருகிறது என்று டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

வடகொரியா நாடானது அணுஆயுத சோதனையை நடத்தினால் நான் சந்தோசமாக இருக்க மாட்டேன் என்று அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சிபிஎஸ் டெலிவிஷன் இணையதளத்திற்கு பேட்டி அளிக்கையில் டிரம்ப் தெரிவித்தார். வடகொரியாவானது ஏவுகணை சோதனையில் ஈடுபட வேண்டாம் என்று சீனாவின் மதிப்புமிக்க அதிபர் ஜி-ஜின்பிங் வலியுறுத்தி வருகிறார். வடகொரியா மேலும் மேலும் ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்தால் ஜி-ஜின்பிங்கும் சந்தோஷமடையமாட்டார் என்றும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சந்தோஷம் அடையமாட்டோம் என்றால் வடகொரியா மீது போர் தொடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த டிரம்ப், அதுகுறித்து எனக்கு தெரியாது. ஒருவேளை அதுவாக இருக்கலாம். அதை பார்ப்போம் என்று டிரம்ப் மேலும் கூறினார்.

ஆணு ஆயுத சோதனையில் ஈடுபட வேண்டாம் என்று வடகொரியாவை வலியுறுத்தி வரும் சீனா, அந்த நாட்டு மீது பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வருகிறது. இதனால் வடகொரியா பெரிதும் பாதிக்கும் என்றும் சீனா சாக்குப்போக்கு கூறிவருகிறது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்