முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கடும் வெயிலால் பக்தர்கள் அவதி

சனிக்கிழமை, 6 மே 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே திருப்பதியில் வெயில் சுட்டெரிக்கிறது கடந்த 2 நாட்களுக்கு முன் 102 டிகிரியும், நேற்று முன்தினம் 104 டிகிரியும் வெயிலின் அளவு பதிவாகியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பகல் 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பலர் வெயிலால் வெளியே வர முடியாமல் விடுதிகளிலும், சத்திரங்களிலும் முடங்கி கிடந்தனர்.

பொதுமக்கள் கூட்டம்

சாமி தரிசனம் செய்து விட்டு, மதிய நேரத்தில் வெளியே வரும் பக்தர்களும், சிறு குழந்தைகளும் சுடு தரையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். குளிர்ந்த பானங்களை வாங்கி சாப்பிடுவதற்காக குளிர்பானக்கடைகள், ஜூஸ் கடைகள், தர்பூசணி கடைகளில் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் நலன் கருதி திருப்பதியில் பல இடங்களில் வெயிலுக்காக தகர கொட்டகைகளை தேவஸ்தான நிர்வாகம் அமைத்துள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தரை விரிப்புகளும் தேவஸ்தானம் சார்பில் போட்டப்பட்டுள்ளது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் குழாய்கள் மூலமும், வாகனங்கள் மூலமாகவும் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

குறையவில்லை

திருப்பதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் வருகை குறையவில்லை. இந்த மாதம் இறுதிவரை வரையிலும், ஜூன் மாதத்தில் முதல் இரு வாரங்கள் வரையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்