முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்காடி வீதியில் பிரமாண்ட பந்தல் : மீனாட்சிக்கு மதுரையில் இன்று முகூர்த்தநாள்

சனிக்கிழமை, 6 மே 2017      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மே.7-     மதுரை சித்திரை திருவிழாவின்  பிரதான நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம்  இன்று கோயில் வடக்காடி வீதியில் விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி வடக்காடி வீதியில் பிரமாண்டமான எழில்மிகு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  நாளை மாசிவீதிகளில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று 9ம் நாள் விழாவாக திக்குவிஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாலை 6 மணிக்கு அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது மீனாட்சி அம்மன் திக்குவிஜயம் நடைபெற்றது. இ ன்று   காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோயிலில் நடைபெறுகிறது.

இதற்காக அதிகாலை 4 மணிக்கு அம்மன், சுவாமி, பிரியாவிடை மணக்கோலத்தில் கல்யாண சுந்தர மண்டகப்படியில் எழுந்தருளி பின்பு சித்திரை வீதிகளில் வலம் வருவர். கோயிலில் ஆடி வீதியில் உள்ள வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு எழுந்தருளுவர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மணமேடையில் வீற்றிருப்பார்கள். திருமணம் நடைபெற்ற பின்பு பொதுமக்கள் தரிசனத்திற்காக அம்மன், சுவாமியும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள்.

திருக்கல்யாணம் முடிந்த பின்பு இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் சுந்தரேசுவரர், பிரியாவிடையும், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சியும் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் 6,000 ஆயிரம் இலவச டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக 250 டன் கொண்ட திறந்தவெளி ஏசி வசதி, பக்தர்கள் அமர கோயிலில் உள்ள வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் வசதி செய்யப்பட்டுள்ளது. விழா பாதுகாப்புக்கு என போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் துணைக் கமிஷனா–்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

நாளை தேரோட்டம்
திருக்கல்யாணம் முடிந்த பிறது நாளை மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம்.  நடைபெறும். அப்போது பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தபடி ஹரஹர சங்கர மீனாட்சி சுந்தரர் என்று பக்தி முழக்கம் இடுவார்கள் .முன்னதாக நேற்று முன்தினம் மீனாட்சி பட்டாபிசேகமும் நடைபெற்றது. நேற்று திக் விஜயம் நடைபெற்றது. அதற்கு முன்பாக ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சொக்கநாதர் பிரியாவிடையும் , வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக் அருள் பாலித்தனர். வரும் 10 ம்தேதி கள்ளழகர்  வைகை ஆற்றில் இறங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago