முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல செயல்களைச் செய்தும் எங்களை விமர்சிப்பதா ? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேதனை

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி  - நதிகளின் தூய்மைக் கேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட உலகக் கலாச்சார விழாவை விமர்சிக்கின்றனர் என்று வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேதனை தெரிவித்துள்ளார்.  “யமுனை நதி தூய்மைக் கேடு அடைந்துவிட்டதே என்பதைக் காட்டத்தான், மக்கள் கவனத்தை இதன் மீது திருப்பத்தான் உலகக் கலாச்சார விழாவை அங்கு நடத்தியதன் நோக்கம். யமுனை நதியை தூய்மைப்படுத்த அரசுடன் இணைந்து பின் தொடர விரும்பினோம்.

ஆனால் இந்த குறிக்கோளே தவறு என்பது போல் நாங்கள் யமுனை நதியின் தூய்மையைக் கெடுத்து விட்டோம் என்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விழாவினால்தான் யமுனை நதி தூய்மைக் கேடு அடைந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை” என்றார். மேலும் அவர் நதிகளை தூய்மைப் படுத்தும் திட்டத்தோடு இயற்கை வேளாண்மை முறைகளை அமல்படுத்த வேண்டும் என்றார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்