முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பெயரை வெளியிட ஆர்.பி.ஐ. மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்குமேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களின் விபரத்தை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

வங்கிகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்குமேலும் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அகர்வால் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார். பொருளாதாரத்தின் நலன் கருதியும், வர்த்தக நம்பகத்தன்மை ரீதியாகவும், ரகசியத்தை காக்கும்விதமாகவும் ரூ.1 கோடி மற்றும் அதற்குமேல் கடன் பெற்றவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 1934-வது ஆண்டு சட்டத்தின்படி பிரிவு 45 இ-ன்படி தகவலை கொடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் கமிஷன் உத்தரவுப்படி கடன் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று மற்றொரு நபர் தாக்கல் செய்ய மனு பேரில், இந்திய ரிசர்வ் வங்கியானது பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வாங்கி சார்பாக எடுத்துரைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் இந்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு  பிறப்பித்தது. அப்படி இருந்தும் தற்போது பெயர்களை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. வங்கிகளுக்கெல்லாம் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியானது தற்போதும் அதே காரணத்தை திரும்பவும் கூறி கடன் பெற்றோர் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்