முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 29 மே 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்   தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 57 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்  அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்  உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்.  அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப்பாட்ஷா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து