முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணையில் இருந்து 4,500 கன மீட்டர் வண்டல் மண் விவசாயிகளுக்கு விநியோகம் கலெக்டர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      ஈரோடு
Image Unavailable

பவானிசாகர் அணையில் இருந்து 4,500 கன மீட்டர் வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், அரசுக்கு கட்டணம் செலுத்தி பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, நஞ்சை நிலம் ஓரு ஏக்கர் வைத்துள்ள விவசாயிக்கு வண்டல் மண், 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க தமிழக முதல்வர் உத்திரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் முதல்கட்டமாக 4,500 ஏக்கர் பரப்பளவில் 13 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்க மே 22 முதல் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து 4,500 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து