முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதகை நகரின் முக்கிய நீராதாரங்களான கோரிசோலா மற்றும் மார்லிமந்து அணைகளை தூர்வாரும் பணி கலெக்டர் பொ.சங்கர் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      நீலகிரி
Image Unavailable

உதகையில் உதகை நகரின் முக்கிய நீராதாரங்களான கோரிசோலா மற்றும் மார்லிமந்து அணைகளை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டார்.

மழை பெய்யவில்லை

“நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு சராசரி அளவுக்கூட மழையளவு இல்லாத காரணத்தினால் மாவட்டத்தின் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியது. இம்மாவட்டத்தின் சராசரி மழையளவான 1920 மி.மீ-ல் 927 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. மீதமுள்ள 993 மி.மீ மழை நமக்கு கிடைக்கவில்லை. அதாவது 51.8 சதவீத மழை பெய்யவில்லை.

சீரும் நடவடிக்கை

தமிழக அரசு தண்ணீர் பிரச்சனையினை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை சீரும், சிறப்புமாக மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் குடிநீர் ஆதாரங்களின் கொள்ளளவினை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.33.1 கோடி செலவில் 72 பணிகள் எடுக்கப்பட்டு, 41 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 31 பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சி பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.5.2 கோடி செலவில் 164 குடிநீர் பணிகள் எடுக்கப்பட்டு, 117 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 47 பணிகள் நடைபெற்று வருகிறது.

309 குடிநீர் பயணிகள்

ஊரக பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.4.5 கோடி செலவில் 309 குடிநீர் பணிகள் எடுக்கப்பட்டு, 282 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 27 பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக ரூ.12.8 கோடி செலவில் 545 பணிகள் எடுக்கப்பட்டு, 440 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 105 பணிகள் நடைபெற்று வருகிறது.

அணைகளை தூர்வாரி நீர் கொள்ளளவினை உயர்த்த திட்டம்

அதேபோல தமிழக அரசின் உத்தரவின்படி, அணைகளை தூர்வாரி நீர் கொள்ளளவினை உயர்த்த திட்டமிட்டு, அதனடிப்படையில் மார்லிமந்து நீர்தேக்கத்தில் 9.60 ஏக்கர் பரப்பளவில் 2100 கனஅளவு மற்றும் கோரிசோலாவில் 2.23 ஏக்கர் பரப்பளவில் 2100 கனஅளவு மண்அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. மேற்கண்ட பணிகள் மார்லிமந்து நீர்தேக்கம் 7.6 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கோரிசோலா நீர்த்தேக்கம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூர்வாரப்பட்ட மணல் விவசாயப் பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். இந்த தூர்வாரப்பட்ட மண் (429 கனஅளவு) தேவையுள்ள விவசாய பெருங்குடிமக்கள் உதகை வட்டாட்சியர் அவர்களின் அனுமதிப் பெற்று மண்ணை பெற்றுச் சென்று பயனடையலாம். இத்தூர்வாரும் பணிகள் முடிவுற்றவுடன் இதனால் தலா 2.1 மி.லி தண்ணீர் கூடுதலாக தேக்க முடியும். இதனால் 21,000 மக்கள் பயனடைவார்கள்.” எனப் பேசினார்.  இச்செய்தியாளர் பயணத்தின்போது, உதகை நகராட்சி பொறியாளர் ரூபன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து