முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில்  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.=

 புகைப்படங்களின் தொகுப்பு

இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், குறிப்பாக இப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தது ஆகிய சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

பொதுமக்கள் பார்வைக்கு

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்வடிவத்தில் கொண்டு வந்த திட்டங்களான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், கிராம புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் மற்றும் உதவித் தொகை, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவித்தல், பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் குடும்ப அட்டையுள்ள அனைவருக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்குதல், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் ஆகியவை திறப்பு விழா உள்ளடக்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.நமது மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் மணிமண்டபம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம், விக்கிரவாண்டி, சின்னசேலம் புதிய தாலுக்கா திறப்பு விழா உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.மேலும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற   எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் புகைப்படங்கள், அவர் தலைமையிலான அமைச்சரவை புகைப்படங்கள், முதலமைச்சர்  5 திட்டங்களை செயல்படுத்தி ஆணையிட்ட புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

பலர் பார்வையிட்டனர்

இப்புகைப்படக் கண்காட்சி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்ததால், வணிகர்கள், வியாபர மக்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 3000க்கும் மேற்பட்டோர் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். பொதுமக்கள் தெரிவிக்கையில்,  தமிழக முதலமைச்சர்  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது இப்புகைப்படக் கண்காட்சி வாயிலாக எங்கள் கண் முன்னால் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து