முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும் மனநிறைவும் கிடைக்கும் துறை எது?

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

நாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான மற்றும் அதிக சம்பளம் தரும் வேலைகள், பெரும்பாலும் உங்களை இருக்கையில் கட்டிப்போடுபவைகளாகவே இருக்கின்றன.

நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருப்பு டப்பாவை (அத்தாங்க கம்ப்யூட்டர்) பார்த்து வாங்கும் சம்பளத்தை விட அதிகளவில் வருமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை அளிக்கும் 13 வேலைவாய்ப்புகளை பற்றி அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முழுவது சராசரி வருமான விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனால் இவை அனைத்து பணிகளுக்கும் ஒரு "அசாதாரன அறிவும், வியக்கவைக்கும் திறமையும் வேண்டும்".

13 வேலைவாய்ப்புகள் : ஒரு வகுப்பறையிலோ, ஒரு பயிற்சிக் களத்திலோ அல்லது பூமியின் மேல் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமான காக்பிட்டிலோ அமர்ந்து நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

டாக்டர் : சராசரி ஆண்டு வருமானம்: 191,880 டாலர்கள் (ஒரு டாலர் 60 ரூபாய் என வைத்து கணக்குப் போட்டு நீங்கள் வயிறெரிவது தெரிகிறது). மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு அர்த்தமுள்ள, ஈடுபாடுடன் கூடிய பணியைச் செய்வதால் அதற்கேற்ற சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். எலும்பு சிகிச்சை நிபுனர், மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் இன்னும் அதிகமாக ஊதியம் பெறுவார்கள். இதில் மயக்க மருந்து சிறப்பு மருத்துவர் சராசரியாக 235,070 டாலர்களை ஆண்டிற்கு சம்பளமாகப் பெறுகிறார்கள்.

“மயக்கவைக்கும் ”நர்சு  javascript:void(0); “மயக்க வைக்கும்” நர்சு  ஆண்டு சம்பளம்: 157,690 டாலர்கள்: அனைவரையும் மயக்கமடையச் செய்யும் ஒரு அதிரவைக்கும் பணியைச் செய்யும் நர்சுகள் கூட சராசரி ஆண்டு வருமானமாக 1,00,000 டாலர்களுக்கும் மேல் பெருகிறார்கள். இவர்களில் சில பேருக்கு மயக்க மருந்தளிக்கும் டாக்டருக்கு உதவியாக இருப்பது மட்டுமே பணி.

பெட்ரோலிய இன்ஜினியர் : ஆண்டு சராசரி வருமானம்: 149,180 அமெரிக்க டாலர்கள். எப்படியாவது பூமிக்கு அடியில் இருந்து எண்ணையை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் எடுத்துவிடுவது இவர்கள் வேலை. இன்றைய தேதிக்கு மிகவும் முக்கியமான திறமை இவர்களுடையது. தேவையான உபகரணங்களை உருவாக்குவதும் மென்பொருளை கண்டுபிடிப்பதும் இந்த வேலையில் அடக்கம்.

விமான பைலட் : ஆண்டு சராசரி வருமானம்: 129,600 அமெரிக்க டாலர்கள்: நெருக்கடியான இடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும், குறைந்தபட்சம் நல்ல சம்பளமாவது கிடைப்பதுடன் உலத்தை நன்கு சுற்றிப் பார்க்கலாம்.

சட்டப் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 122,280 அமெரிக்க டாலர்கள்: ஒரு சட்டப் பேராசிரியராக இருப்பது நல்ல விஷயம் தான். அடுத்த தலைமுறை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் கற்றுத்தரும் வாய்ப்புடன் அருமையான சம்பளமும் கிடைக்கும். யாருக்குத் தெரியும், பில் கிளின்டனைப் போலவோ அல்லது பாரக் ஒபாமாவைப் போலவோ முதலில் சட்டப்பாடம் எடுத்துவிட்டு பின்னர் பெரும் பொறுப்புகளையும் பணிகளையும் நீங்கள் கையாள நேரிடலாம்!

புவிஆய்வாளர் : இப்பணிக்கான ஆண்டு வருமானம் 108,420 அமெரிக்க டாலர்கள்: இந்த புவி அறிவியலாளர்கள், ஒரு பெரிய அளவிலான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகளையோ, பொறியியல் அல்லது சுற்றுச் சூழல் ஆலோசனை நிறுவனங்களிலேயோ, சுரங்கம் அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ பணிபுரியலாம்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் : ஆண்டு சராசரி வருமானம் 105,880 அமெரிக்க டாலர்கள்: கற்றுத்தரும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் அல்லது விலங்கின மருத்துவர்கள் பணி எளிதாக ஒரு ஆறு இலக்க சம்பளத்தைப் பெற்றுத் தரும். சராசரி சம்பளம் தொழிலைச் செய்துவரும் ஒரு இயன் மருத்துவரை ஒப்பிடுகையில் குறைவானாலு, அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

விண்வெளி பொறியாளர் : ஆண்டு சராசர் சம்பளம்: 105,450 அமெரிக்க டாலர்கள். விண்கலங்களையும் விமானங்களையும் தயாரிப்பதைவிட ஒரு ஆர்வமுள்ள பணி வேறு எதாவது இருக்க முடியாது. பெரும்பாலான எஞ்சினியர்கள், அலுவலத்தில் தங்கள் அதிகமான நேரத்தை செலவிடுகையில், மற்றவர்கள், நேரடியாகக் களத்திற்குச் சென்று அவை எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை கண்கானிப்பார்கள்.

ரசாயன பொறியாளர் (கெமிக்கல் இன்ஜினியர்) : ஆண்டு சராசரி வருமானம்: 104,340 அமெரிக்க டாலர்கள்: மருந்திலிருந்து எரிபொருள் வரை அனைத்திலும் இவர்கள் பங்கு இன்றியமையாதது. பலர் அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், மற்றவர்கள், சோதனைக்கூடங்களிலும் அல்லது அவர்களுடைய அறிவியலைப் பயன்படுத்தி உணவு அல்லது ரசாயனங்கள் உருவாக்கப்படும் தொழிற்கூடங்களிலும் பணிசெய்யும் வாய்பை பெறுகின்றனர்.

பொறியியல் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 102,880 அமெரிக்க டாலர்கள். இந்த வேலை பெரும்பாலும் கற்றுத்தருதலையோ அல்லது ஆராய்ச்சி செய்வதையோ முக்கியமாகக் கொண்டவர்ளை உள்ளடக்கியது.

பொருளாதாரப் பேராசிரியர் : ஆண்டு சராசரி வருமானம்: 100,490 டாலர்கள்: கல்லூரி வகுப்பறைகளில் நல்ல வருமானமும், பொருளாதாரப் பேராசிரியர்களுக்கு எங்கு சென்றாலும் அவர்களில் கொள்கை மற்றும் முடிவெடுக்கும் திறமைகளுக்காக நல்ல புகழும் கிடைக்கிறது. தற்போதைய அமெரிக்காவின் அரசு நிதி ஆலோசனைத் தலைமை பொறுப்பு வகிக்கும் ஜானட் எல்லன், அரசாங்க வேலைக்கு முன்பாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி மேலாளர் (ப்ரொடக்ஷன் மேனேஜர்) : ஆண்டு சராசரி வருமானம்: 99,370 டாலர்கள்: ஒரு சராசரி தொழிற்கூட மேலாளர், ஏறக்குறைய ஆறிலக்க சம்பளம் பெறுகிறார். ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்வது அலுவலகத்தில் செய்வதை விட சுலபமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சுரங்க மற்றும் புவியியல் ஆய்வுப் பொறியாளர் (மைனிங் அண்ட் ஜியாலஜிக்கல் எஞ்சினியர்): ஆண்டு சராசரி வருமானம் $96,950 டாலர்கள். சுரங்கத்தில் அல்லது நில உருவாக்க களங்களில் பூமிக்குக் கீழே என்ன நடக்கிறது என்பதையும் அவை சுற்றுச்சூழலுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பானதுதானா என்பதை அறிந்தவர்கள் இவர்கள். சுரங்கத் தொழில் ஒரு ஆபத்தான தொழிலாக இருப்பினும், சம்பளம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லைதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து