முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லடம் வட்டம் சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசாணை

திருப்பூர் மாவட்டத்தில், உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப்புறம்போக்கு ஏரி, குளம் மற்றும் நீர்தேக்கங்களிலிருந்து விவசாயம், வீட்டு பொது உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய உபயோகங்களுக்காக வண்டல், சவுடு மண் மற்றும் கிராவல் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அரசாணை.50, தொழில் (எம்.எம்.சி1) துறை நாள் 27.04.2017-ன்படி தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி மாவட்டத்தில் அமைந்துள்ள 144 நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட விவசாயிகள்  எவ்வித கட்டணமுமின்றி  இலவசமாக எடுத்து சென்று விவசாய நிலங்களில் பயன்படுத்தி உற்பத்தி திறன் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடவும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூர்வாரும் பணி

இதனைத் தொடர்ந்து, பல்லடம் வட்டம் சாமளாபுரம்  பேரூராட்சிக்கு உட்பட்ட  பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள சாமளாபுரம் குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர்  நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தில்  மண் எடுக்கப்பட்டு வரும் விபரங்கள் குறித்தும்  அலுவலர்களிடம்  கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார்  பல்லடம் வட்டாட்சியர் சாந்தி , நீர்வள ஆதார அமைப்பு (பாசன பரப்பு) உதவி பொறியாளர் சுபாஷினி , விவசாயிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து