முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனாம்காரியந்தல் கிராமத்தில் மனுநீதிநாள் விழா 152 பயனாளிகளுக்கு ரூ. 4.53 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆர்டிஒ உமாமகேஸ்வரி வழங்கினார்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை வட்டம் இனாம்காரியந்தல் கிராமத்தில் முனியந்தல், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் ஆகிய கிராமங்களுக்கு மனுநீதிநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார் தாசில்தார் ஆர்.ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் அமுல் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த மனுநீதிநாள் விழாவையட்டி மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 152 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன 201 மனுக்கள் பரிசீலனைனயில் உள்ளது. 55 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நலத்திட்ட உதவி

விழாவில் தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி 152 பயனாளிகளுக்கு ரூ. 4.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் இது நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாகும். குழந்தை திருமணம் நடத்தினால் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். பெற்றோர்கள் குழந்தைகளை தவறால் பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

விவசாயிகள் சிறுவிவசாயிகளுக்கான சான்று விண்ணப்பித்தால் மட்டுமே கொடுக்காமல் சிறுவிவசாயிகள் என தெரியவந்தால் வருவாய்த்துறை அலுவலர்களாகிய நீங்களே சென்று வழங்க வேண்டும் என்றார். இந்த விழாவில் வேளாண் உதவி இயக்குநர் எம்.செல்வராஜ் வேளாண் உதவி அலுவலர்கள் எம்.ஜெயராமன், எம்.செந்தில்வேல், இ.பாபு, கே.வீரமணி, எம்.சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தனிவருவாய் ஆய்வாளர் த.விஜயரங்கன் முன்னாள் ஊ£ட்சி மன்ற தலைவர் இரா.பத்ராசலம், பள்ளி தலைமை ஆசிரியர் க.க.விஜயலட்சுமி கிராம நிர்வாக அலுவலர்கள் வி.பலராமன், ஜீவிதா, பரணிதரன் சத்தியாதேவி, வெங்கடேசன், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் , விவசாய பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கே.ஜெயக்குமார் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து