முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் த.ந.ஹரிஹரன் தொடங்கிவைத்தார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      கோவை

 

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு மையம் சார்பில் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் த..ஹரிஹரன் தொடங்கிவைத்து பின்னர் தெரிவிக்கையில்

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

 

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 14-ம் தேதி இரத்த கொடையாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று(14.06.2017) கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 3(மூன்று) இடங்களில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 116 பேர் இரத்தம் தானம் செய்தனர். இதுபோன்று பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்து இரத்த தானம் செய்ய இன்று(15.06.2017) பேரணி நடைபெற்றது.

இரத்ததானத்தின் அவசியம்

இப்பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் விதமாக ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்ய வேண்டும், இரத்ததானத்தின் அவசியம் போன்றவையும், இரத்ததானம் செய்வீர் ! உயிர் காப்பீர் ! பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு ! பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு ! என்ற இரத்த தானம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இரத்த தானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலம் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்டுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு, மேலும் ஹிமோகுளோபின் அளவினை கட்டுபடுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்ததானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. இரத்ததானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க! பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்கையல்ல! கொடுத்து வாழ்வதே வாழ்க்கை! ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்கு தானம் செய்து வாழ்க! என மாவட்ட கலெக்டர் த..ஹரிஹரன் தெரிவித்தார்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்ற விழிப்புணர்வு பேரணியானது, இரயில் நிலையம் வழியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைவரை சென்று நிறைவடைந்தது.

 

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பி.ஜி.பானுமதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, கோயம்புத்தூர் .எஸ். மருத்துவக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், குடும்ப நல துணை இயக்குநர் கிருஷ்ணா, இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேரலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து