முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 211.08 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருப்பூர்

 

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,

பசுமை வீடு

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டுப்பாளையம் ஊராட்சி, காவேரி நகர் பகுதிகளில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும், அதே பகுதியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் ரூ. 1.70 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டும் பணி நடைபெற்று வருதையும் பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்திட வேண்டும். பணி நடைபெறும்போது கண்காணிப்பு அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பிரதான மந்திரி கிராம் சதக்யோஜனா திட்டத்தின் மூலம்

இதனைத்தொடர்ந்து, மொரட்டுப்பாளையம் முதல் நல்லகட்டிப்பாளையம் வரை பிரதான மந்திரி கிராம் சதக்யோஜனா திட்டத்தின் மூலம் ரூ. 75.60 இலட்சம் மதிப்பீட்டில் 1.490 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மொரட்டுப்பாளையம் ஊராட்சியின் மூலம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் மற்றும் மண் புழு உரம் தயாரித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன் வீடுகளிலிருந்து குப்பைகள் சேகரிக்கும்போது அவர்களிடமே தரம் பிரித்து வைத்திட அறிவுறுத்த வேண்டும். அப்போது தான் பணி எளிதாக முடித்திட முடியும் என பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்த வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.95 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருதை பார்வையிட்டதுடன் அங்கு புதிய மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நடவு செய்ததுடன் இப்பகுதியில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

 பின்னர், கவுண்டன்பாளையம் ஊராட்சியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தையும் மற்றும் ரூ. 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் பார்வையிட்டதுடன் அங்கு போதிய அளவு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு கட்டிடங்களை நல்ல முறையில் பராமரித்திட வேண்டும் என தெரிவித்தார்

இதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரெட்டிபாளையம் ஊராட்சியில் ரூ.54.74 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார். மேலும், அதே பகுதியில் ரூ.27.24 இலட்சம் மதிப்பீட்டில் இருப்புபாதையை கடந்து விஜயமங்கல சாலை முதல் வேலங்காட்டுப்பாளையம் வழியாக ரெட்டிபாளையம் மயானம் வரை சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருதை பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். பின்னர் ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வளாகத்தில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருதை பார்வையிட்டதுடன், அப்பள்ளி வளாகத்தில் மேலும், கூடுதலாக கழிப்பறை கட்டிடங்கள் கட்டித்தர தலைமை ஆசிரியர் கோரிக்கையை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அமைத்து கொடுத்திட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர்களிடம் கல்வி தரம் குறித்து கேட்டறிந்ததுடன், மாணவ, மாணவியர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி மற்றும் உபகரணங்கள் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டதையும் பார்வையிட்டு நல்ல முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டுமென ஆசிரியர்ககளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், பாலகங்கா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து