முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      புதுச்சேரி

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீது அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் பேசினார். அவர் பேசியதாவது:-

 கவனம் செலுத்த வேண்டும்

புதுவையில் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற் பிளஸ்-2 பொதுத் தேர்வில் முந்தைய ஆண்டைவிட தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய வேண்டும். நடப்புகல்வி ஆண்டில்கடந்த கல்விஆண்டை போல இல்லாமல் தேர்ச்சி சதவிகிதம்  அதிகரிக்க தொடக்கத்தில்இருந்தே கவனம் செலுத்த வேண்டும். 10-ம் வகுப்பில்இருந்து 11 மற்றும் 12 ஆகிய 3 பொதுத் தேர்வாக இருப்பதுடன் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு ஒன்றையும் எழுத வேண்டி உள்ளது. இதனால்மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவர்.

பணி நிரந்தரம் செய்யவில்லை

இதனை கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்தில்இருந்து கேள்வித்தாளை தயார் செய்ய மத்திய அரசுக்கு இந்த சட்டப்பேரவையில்இருந்து வலியுறுத்த வேண்டும். அதேபோல எனது முதலியார்பேட்டை தொகுதியில் 51 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்த்த வேண்டும்என்பது எனது பலநாள் கோரிக்கை. இதை ஏன்அரசு செய்ய மறுக்கின்றது என்று தெரியவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விகற்றுத் தர சிறப்பு ஆசிரியர்கள்பல ஆண்டு காலமாக பணி செய்து வருகின்றனர். அவர்களை இன்னும்இந்த அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை.

இலவச லேப்-டாப்

பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப்-டாப் வழங்க வேண்டும். அதேபோல அரசு உதவி பெறும்தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும்இவகச லேப்டாப் வழங்க  வேண்டும். வேளாண் துறைக்கு உதவி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பாசிக் தற்போது கடன் சுமையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். பாசிக் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள அதிகாரிகள் அரசு செயலரை கூட கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகளையும், உரங்களையும் இடு பொருட்களையும்வழங்க வேண்டும். புதுவையில் விளையாட்டுக் கென்று தனித்துறை இல்லை. கல்வித்துறையுடனே இணைந்து செயல்பட்டு வருகிறது. இதனால் விளையாட்டுக் கென்று தனித்துறையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து