முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டு இறைச்சி விவகாரம்: மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      புதுச்சேரி

மாட்டு இறைச்சி உண்பதை தடுக்கும் வகையில் மத்திய அரசு இறைச்சிகளுக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

 சட்டசபையில் தாக்கல்

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரள சட்டசபையில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதே போல புதுவை சட்டசபையிலும் நேற்று இந்த இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி சட்டசபையில்தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு அதிரடி

மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் கடந்த மே 23-ந் தேதி கால்நடை விற்பனை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. அதோடு கால்நடை வளர்ப்போரின் உரிமையையும் பறிக்கிறது. மத்திய அரசு தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மாடு, ஒட்டகம், எருமை முதலியவற்றின் இறைச்சிகளை உண்ணக் கூடாது என்பதை ஏற்க முடியாது. பிரெஞ்சு கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்துள்ள புதுவை மக்கள் உண்ணும் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கமுடியாது. புதுவையின்அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து குரல்கொடுத்து வருகின்றனர். எனவே மத்திய அரசு கால்நடை விற்பனை விதிமுறைகளை உடனே திரும்ப பெற வேண்டும் என இந்த சட்டசபை சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து சபாநாயகர் உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.

தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸ் உறுப்பினர் அனந்தராமன் இதை வரவேற்று பேசினார். இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதித்தார். அனைத்து உறுக்pனர்களும் அரசின் இந்த தீர்மாத்தை ஏற்பதாக கூறியதால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து