முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்க்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் 1.62 ஏக்கர் மீட்க்கப்பட்டு அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   இன்று (18.06.2017) தகவல் தெரிவித்தார்.
 
கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமையும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் மற்றும் வரைபடங்களின்படி, பொறியாளர்கள் உரிமம் பெற்ற கட்டிட பட வரைவாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தெரியும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஏற்கனவே மாநகராட்சியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் புதிதாக இணைக்கப்பட்ட (நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி) பகுதிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு விபரங்கள் மற்றும் வரைபடங்கள் சேர்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 இதைத் தவிர, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள சாலைகள், பொது ஒதுக்கீடு மனைகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் கிடைக்கப்பெறும் ஆவணங்களையும் கொண்டு உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்து உள்ள வழக்குகளையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

 மேற்கண்ட பணிகள் நகரமைப்பு பிரிவு மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர, அவ்வப்போது பெறப்படும் புகார் மனுக்கள், தொலைபேசி மற்றும் அலைபேசி குறுந்தகவல் மூலம் பெறப்படும் புகார்களையும் இடம் கண்டறியப்பட்டும், கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் வரைபடங்களுடன் சமர்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடங்கள் புதிதாக கவனத்திற்கு வரும் வரைபடங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, மேற்படி மனைப்பிரிவுகளில் அமையும் பொது ஒதுக்கீடு மனைகளில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக உள்ள ஆக்கிரமிப்புகள், உபயோகப்படுத்த முடியாத நிலையில் முட்புதர்கள் இருப்பின், அதனையும் ஆய்வு செய்து பிரதிவாரமும் அந்தந்த ஆக்கிரமிப்புகளின் தன்மைக்கு தகுந்தவாறு மாநகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

 இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது உபயோகமற்ற நிலையில் இருக்கும் பொது ஒதுக்கீடு மனைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கிடைக்கறது. மேலும் ஆய்வின் போது திறவிடங்களாக இருக்கும் ஒரு சில பொது ஒதுக்கீடு மனைகள் தனியாளர்களால் பொதுமக்களுக்கு விற்கப்பட்ட மனைகளும் கண்டறியப்பட்டு மாநகராட்சியால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மேற்கண்ட பணிகள் அனைத்தும் தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, தவறாகவும் ஏமாற்றப்படும் ழுளுசு மனைகளை விற்பனை பெற்ற தனியாளர்களால் புதிதாக வாங்க முற்படுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மேற்கண்ட பணிகள் செய்யப்பட்டு வருவதால், புதிதாக பொது ஒதுக்கீடு மனைகள் மேற்கொண்டு ஆக்கிரமிக்கவோ, விற்பனை செய்யவோ இயலாத வகையில் பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

16.06.2017 மற்றும் 17.06.2017 அன்று கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி கிராமம், வார்டு எண். 34, வி.வி.சி நகர் பகுதியில் அமைந்துள்ள, 27 சென்ட் பரப்பளவும், 2.16 கோடி மதிப்பும் கொண்ட பூங்கா திடலில், சோமசுந்தரம் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த 15ஒ8 அளவிலான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

 மேலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வடவள்ளி கிராமம், வார்டு எண். 16, பெரியார் நகர் பகுதியில் உள்ள 13.5 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளக்கிணர் கிராமம், வார்டு எண். 26, வெள்ளக்கிணர் பேஸ் ஐஐ பகுதியில் உள்ள 125 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர் கிராமம், வார்டு எண்.88, வெற்றித்திருநகர் பகுதியில் உள்ள 23 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 1.62 ஏக்கர் பரப்பளவிலான பூங்கா ஒதுக்கீட்டு பகுதியில் சுத்தம் செய்து, பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் அமையும் பொது ஒதுக்கீடு சம்பந்தமாக ஆணையாளர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு பிரிவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து